தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

எனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்….???

கல்யாண வயசு பசங்களா (Boys & girls) நீங்க?
(என்னது முத்துன கத்திரிக்காயா நீங்க;
நோ ப்ராளம், நீங்களும் படிக்கலாம்).

நமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு நீங்க பயந்துகிட்டிருக்குற ஆளா, இல்ல‌
நமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு பெருமூச்சு விடுற டைப்பா,
எதுவா இருந்தாலும் வாங்க உங்க கல்யாணம் எப்ப நடக்கும்ன்னு உடனே தெரிஞ்சிக்கலாம்.

முதல்ல கேள்விக்கெல்லாம் பதுல சொல்லுங்க..
(எத்தனை அ/ஆ/இ தெரிவு செய்றீங்கன்னு கணக்கு வச்சிக்கோங்க‌).

உங்க வயசு என்ன?
அ. 20 -‍ 25
ஆ. 25 – 30
இ. 30 <

உங்க லைஃப் பார்ட்னர் பாக்க எப்படி இருக்கணும்?
அ. சினி ஸ்டார், Page 3 ரேன்ஜ்ல
ஆ. அழகுன்னு சொல்ல முடியாட்டியும், லட்சணமா இருக்கணும்
இ. okன்னு சொல்ல முடியாட்டியும், பயந்து கண்ண மூடிக்கிற அளவுக்கு இல்லாம இருக்கணும்

உங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ படிச்சிருக்கணும்?
அ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது
ஆ. எதாவது ஒரு டிகிரி
இ. எழுத படிக்க தெரிஞ்சா போதும்

உங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ சம்பாதிக்கணும்?
அ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது
ஆ. என் சம்பளத்தில் அட்லீஸ்ட் 1/3
இ. சம்பாதிப்பது முக்கியமில்லை. பணத்தின் அருமையும், சேமிக்கும் திறமும் போதும்.

உங்க லைஃப் பார்ட்னர் எந்த ஊருல இருக்கணும்?
அ. நான் இருக்கும் ஊரிலேயே
ஆ. நான் இருக்கும் ஸ்டேட்டிலாவது
இ. கிரக்கோஷியானாலும் சரி தான்.

உங்க லைஃப் பார்ட்னர் எதை சேர்ந்தவரா இருக்கணும்?
அ. ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே உட்பிரிவு / ஒரே கொள்கை, ஒரே கோஷ்டி
ஆ. ஒரே மதம் / ஜாதி / கொள்கை இருந்தா போதும். உட்பிரிவு, கோஷ்டி பத்தி கவலயில்ல.
இ. எதையும் சேராதவரா இருந்தாலும் ஒகே தான்.

உங்க லைஃப் பார்ட்னரின் நிறம்?
அ. பூமி தொடா பிள்ளையின் பாதம்
ஆ. மத்திம‌ நிறமாவது
இ. திராவிட நிறமே கருப்பு தான்

உங்களுக்கும் உங்க லைஃப் பார்ட்னர்க்கும் வயசு வித்தியாச எதிர்பார்ப்பு
(ம.மகன் வயசு -‍ ம.மகள் வயசு = )?
அ. அதிகபட்சம் 2 ஆண்டுகள் 364 நாட்கள்
ஆ. 6 வருஷம் பெரிய வித்தியாசமில்ல‌
இ. 9 வருஷம் தான, பரவாயில்ல‌

உங்க லைஃப் பார்ட்னரின் குணம் / நடத்தை பற்றிய எதிர்பார்ப்பு?
அ. யோக்கியம் நெம்பர் 1. (தரச்சான்றுடன்)
ஆ. ரொம்ப யோக்கியம்மா யாருமே இருக்கமுடியாது
இ. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தா போதும்

வரதட்சணை….
(பெண்கள் இந்த கேள்விக்கான விடைகளை கீழிருந்து மேலாக மாற்றிக்கொள்ளவும்)
அ. As per present market trend
ஆ. பொண்ணு வீடா பாத்து ஏதாவது / என் சகோதரிக்கு செய்த அளவு
இ. மூச்…என்ன பேச்சு சின்னபுள்ளதனமா

முடிவுகள்:

1. மிக அதிகமாக "அ" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நெனப்பு ரொம்ப ஓவரா இருக்கு. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் உங்களுக்கு கல்யாண ப்ராப்தமே கிடையாது. அதுக்கு முன்னாடி குருட்டு யோகத்துல யாராவது இளிச்சவாய் உங்ககிட்ட ஏமாந்தாதான் உண்டு. ‌முடிஞ்சா திருந்தப்பாருங்க‌.

2. மிக அதிகமாக "ஆ" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நல்ல மனபக்குவம் வர ஆரம்பிச்சிருச்சு. கூடிய சீக்கிரம் வரன் அமஞ்சிடும். முடிஞ்சா "இ" யை, இன்னும் சில கேள்விங்களுக்கு தெரிவு செய்ங்க.

3.மிக அதிகமாக "இ" யை தெரிவு செய்தவர்கள்: என்ன!!!! உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?????? ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல? வருத்தப்படாதீங்க‌, எல்லா கேள்விக்கும் "இ"யையே தெரிவு செய்ங்க, கல்யாண யோகம் வரும்.

நீதி:

"கல்யாண யோகம்"கிறது பீக் ஹவர்ல வர்ற வண்டி மாதிரி. நம்ம தராதரத்துக்கு ஏத்த மாதிரி டவுண் பஸ்ஸோ, ஆட்டோவோ, டாக்சியோ வர்ற முத வண்டியில ஏறி போயிட்டே இருக்கணும். கூட்டமா இருக்கு, வசதியா இருக்காதுன்னு குத்தம் பாத்துக்கிட்டிருந்தா, அங்கயே நிக்க வேண்டியது தான்.

காலம் போயிட்டே இருக்கும்…..

அதுக்கப்புறம், மொத பஸ்லேயே அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்ன்னு, புத்தி வந்தாலும் பிரயோஜனம் இல்ல.

18 responses to “எனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்….???

  1. படைப்பாளி 15:30 இல் ஜூலை 7, 2010

    ///கல்யாண யோகம்”கிறது பீக் ஹவர்ல வர்ற வண்டி மாதிரி. நம்ம தராதரத்துக்கு ஏத்த மாதிரி டவுண் பஸ்ஸோ, ஆட்டோவோ, டாக்சியோ வர்ற முத வண்டியில ஏறி போயிட்டே இருக்கணும். கூட்டமா இருக்கு, வசதியா இருக்காதுன்னு குத்தம் பாத்துக்கிட்டிருந்தா, அங்கயே நிக்க வேண்டியது தான்.
    காலம் போயிட்டே இருக்கும்…..////

    இந்த மேட்டர் ல ஓடும் பஸ்சையும் துரத்திப் பிடிக்க முடியாது..அதுக்குள்ள அந்த பஸ்சை வேற ஒருத்தன் பிக் அப் பண்ணிருப்பான்.

  2. soundr 17:05 இல் ஜூலை 7, 2010

    //இந்த மேட்டர் ல ஓடும் பஸ்சையும் துரத்திப் பிடிக்க முடியாது..அதுக்குள்ள அந்த பஸ்சை வேற ஒருத்தன் பிக் அப் பண்ணிருப்பான்//

    :))

  3. அன்புடன் மலிக்கா 13:08 இல் ஜூலை 9, 2010

    கல்யாணமாகதவர்களே! கவனியுங்கள்.

  4. rasarasachozhan 11:39 இல் ஜூலை 10, 2010

    இதுவும் நல்ல இருக்கே…

  5. Madhan 00:22 இல் ஜூலை 12, 2010

    நீங்களும் கல்யாணத்தபத்தி எழுதி இருந்தீங்களா? அருமை! 🙂

  6. அப்பாவி தங்கமணி 02:57 இல் ஜூலை 12, 2010

    ஹா ஹா அஹ … சூப்பர் அனலிசிஸ்…. என்னங்க sir – தேடி தேடி ரெம்ப வெறுத்து போய் தீசிஸ் பண்ற ரேஞ்சுக்கு போயிட்டீங்க போல… நீங்க எந்த category ? ஹா ஹா ஹா… சூப்பர் பதிவு தான்
    (I tried to click your link from the comment you posted on the site, the blog link was not shown there. Please add your blog link to your profile page. It would be easier for people to come and read if the link is there… just a thought. Thanks)

  7. அப்பாவி தங்கமணி 02:57 இல் ஜூலை 12, 2010

    ஹா ஹா அஹ … சூப்பர் அனலிசிஸ்…. என்னங்க sir – தேடி தேடி ரெம்ப வெறுத்து போய் தீசிஸ் பண்ற ரேஞ்சுக்கு போயிட்டீங்க போல… நீங்க எந்த category ? ஹா ஹா ஹா… சூப்பர் பதிவு தான்
    (I tried to click your link from the comment you posted in my blog, your blog link is not shown in your profile page. Please add your blog link to your profile page. It would be easier for people to come and read if the link is there… just a thought. Thanks)

பின்னூட்டமொன்றை இடுக