தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

இன்று ப்ரியங்காவிடம் நான்…

இன்று ப்ரியங்காவிடம் நான்
மனம் திறந்து சொல்லிவிட‌ப்போகிறேன்.
இப்படி என்னை மெல்ல, மெல்ல கொல்லாதே.
இந்த அவஸ்தையை இனிமேலும் பொருக்க முடியாது.

நேருக்கு நேராக அவள் கண்களை பார்த்து சொல்வதா, அல்லது
அவள் முன் மண்டியிட்டு கைகள் குவித்து சொல்வதா?

இந்த PG medical research instituteடில் செகண்ட் இயர் மாணவி, ப்ரியங்கா. நானோ
இங்கு வந்து சேர்ந்து நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை.
அவள் batchmate கள் மட்டும் அல்ல ஆசிரியர்கள் சிலரே
அவளுடன் பேச, பழக ஆசைபடுவார்கள்.
ஆனால், இங்கு வந்து சேர்ந்த நாளில் இருந்தே நாங்கள்
இருவரும் பல நாள் பழகியவர்கள் போல, எந்தவித தயக்கமும்
இன்றி பழக ஆரம்வித்துவிட்டோம்.

சொல்லப்போனால் ப்ரியங்கா என்னை பார்க்கும் பார்வையில்
இப்போது மெல்ல, மெல்ல வித்தியாசம் தெரிகிறது.

என்னுள், அவள் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்
எனக்கும் நன்றாகவே தெரிகிறது. சில நாட்களாக
சரியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை.
அவ்வப்போது, என்ன செய்கிறேன், ஏது செய்கிறேன் என்று
எனக்கே தெரியாமல் அப்படியே மயங்கி இருப்பேன்.

நான் இங்கு வந்து சேர்ந்த புதிதில், என் சீனியர் ஒருவனும்,
இப்படித்தான் இருந்தான். நான் அவனை நக்கலாக சிரிப்பதை
பார்த்து ஒரு நாள், “தம்பி, இது எல்லாம் அனுபவிச்சாத்தான்டா புரியும்”,
என்றான். இன்று புரிகிறது.

இதோ, ப்ரியங்கா வந்துவிட்டாள்.
ஆனால், கூடவே அவள் தந்தையுமான ப்ரொபஸர்.
என்னை பார்த்ததும் ப்ரியங்கா சற்று தயங்கி நின்றாள்.

“It’s, OK. Your decision is right, proceed”, என்றார்.
ப்ரியங்கா என்னை நெருங்கி வந்து,
என் கண்களை பார்த்து, “Sorry”, என்றாள்.

என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்ளும்
முன்னர், ஏதெதோ நடந்துவிட்டது.

“Thanks, Priyanka”,
என்று கண்ணீர் சிந்தியபடி
கடைசியாக, மெல்ல கண்களை மூடிய நான்;
புதிய மருந்துகளின் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டு
கருணைகொலை செய்யப்பட்ட‌
ஒரு வில‌ங்கு.

14 responses to “இன்று ப்ரியங்காவிடம் நான்…

  1. soundr 16:57 இல் நவம்பர் 28, 2009

    உங்களுக்கு பொறாம. 🙂

    நேத்து வந்த ஜுனியர், இவ்வளவு
    அனுபவப்பூர்வமா,…ச்..ச்ச்சீ
    உணர்வுப்பூர்வமா ஒரு கதய‌
    செதுக்கியிருக்கானேன்னு. 🙂

  2. sriram 16:07 இல் நவம்பர் 29, 2009

    சீ பாவம்….என்று சொல்ல நினைத்தாலும்…ஏதோ நெருடுகிறது …

  3. Jawahar 14:20 இல் நவம்பர் 30, 2009

    நல்லா இருக்கு. நான் என்பது யார் என்பதை படிக்கிறவர்கள் தாங்களாகப் புரிந்து கொள்கிற மாதிரி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    http://kgjawarlal.wordpress.com

    • soundr 14:38 இல் நவம்பர் 30, 2009

      thanks, Jawahar.
      ஸார், உண்மைய சொல்லணும்ன்னா இப்போதைக்கு விரல்போன போக்குல ஏதோ தட்டி பழகிட்டிருக்கேன். இந்த படைப்புகள் எல்லாம் தேருமா தேறாதான்னு யோசிக்காம ஏத்திக்கிட்குருக்கேன்.
      நீங்க சொல்ற presentation style super ஆ இருக்கும்தான். அந்த மாதிரி எழுதவும் ஆசைதான். அந்த மாதிரி நான் சரியாக செய்யும்வரை கொஞ்சம் என்னை பொறுத்தாதரவு தாருங்கள்.

  4. சுரேஷ் 12:33 இல் திசெம்பர் 1, 2009

    onnumae puriyalae baaaaaa

    tamiL a eludhunga baaaaa

    bejara keedhu

  5. soundr 13:12 இல் திசெம்பர் 1, 2009

    அடடா, எல்லாரையும் ரொம்ப சோதிச்சிட்டோம் போலயிருக்கே.
    கொஞ்சம் ரீரைட் பண்ணீருக்கேன்.
    முதல்ல கடைசி பாராவ படிங்க.
    அப்புறம் முதல் பாராவில இருந்து படிச்சி பாருங்க.

    மெல்ல, மெல்ல கொல்லாதே; அவஸ்தை;
    தயக்கமும் இன்றி பழக ஆரம்வித்துவிட்டோம்;
    என்னை பார்க்கும் பார்வையில் வித்தியாசம்; ரசாயன மாற்றங்கள்;
    சரியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை;
    மயங்கி இருப்பேன்; அனுபவிச்சாத்தான்டா புரியும்;

    அப்புச்சி, மேற்சொன்ன எல்லாமே Love parties மட்டும் இல்ல, மருந்துகளின் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டும்,
    விலங்குகளும் அனுபவிக்கும்.

  6. சுரேஷ் 13:22 இல் திசெம்பர் 1, 2009

    ippo puringiduchu nanbaaaaaaa

    vilakkiyamaikku nandri

    edho puriyaama kettuttom

    reading once more…………..

    wait……………

    hey super pa!!!!!!!!!

    edhai senjaalum oru dhinusaadhaan pa seyyuraaru

  7. soundr 14:17 இல் திசெம்பர் 1, 2009

    இவங்களுக்கு விளக்கம் சொல்லியே…….
    (ஹி…ஹி….சும்மா கொஞ்சம் பந்தா விடலாம்ன்னு.)

  8. மணி 13:06 இல் திசெம்பர் 11, 2009

    நல்லா இருக்கு நண்பா காதல் கதை மாதிரி வந்து முடிவுல மாறியது நல்ல டிவிஸ்டே

  9. divyahari 13:50 இல் திசெம்பர் 18, 2009

    நல்ல எழுதுறிங்க… பாராட்டுக்கள்.. ஒரு டவுட் ரூம் போட்டு யோசிபிங்கலோ..?

    • soundr 14:48 இல் திசெம்பர் 18, 2009

      thanx, divyahari.

      ரூம் போட்டு எல்லாம் யோசிக்கிறதில்ல, madam.
      பாஸ் ரூம விட்டு, நொந்து நூடில்ஸாகி
      வெளிய வரும் போது……
      ஒரு கற்பன பிச்சிகிட்டு வரும் பாருங்க….
      உண்மையிலேயே, இதுக்கெல்லாம் அவருக்குதான்
      நன்றி சொல்லணும்.

soundr -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி