தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

Tag Archives: ரசித்தவை

நன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல

Advertisements

இரட்டை அர்த்த கவித…

நான் பாட்டுக்கும் சம்மா தாங்க இருந்தேன்.
(ஹலோ, உங்க மயிண்ட் வாய்ஸ்ஸ‌ ஆஃப் பண்ணுங்க.
“நீ என்னைக்கிடா சும்மா இருந்த”,ன்னு நீங்க நெனைக்குறது, எனக்கு நல்லா கேக்குது).

வேல்தர்மாவோட (நெருப்பணை) firewall இல்லாமல் தாயானாள், பாத்தேன். நல்லா இருந்துச்சு. சரி அப்டியே நாமளும் ஒரு ட்ரை பண்ணி பாப்பமேன்னு எழுதுனது தான் இந்த வசனம்…ச்சி..ச்சி…கவித.

நெருப்பாய் அணைக்கையில்
மஞ்சத்தில்
நெருப்பணையை மறந்திட்ட‌
நெஞ்சத்தில்

தவிப்புகள் தளரும் வரை
தரச்சான்றும் தேடார்
தாய் யார், தந்தை யாரென‌
தகவலும் வேண்டார்

தரவிறக்கமே சொர்க்கம்

தரம் இறங்கியது செயல்படின்
தரித்திரமே நிதர்சம்
தர்க்கமே மிச்சம்

இந்த வரிங்கோ, firewall protection இல்லாத லேப்டாப்ல கண்ட சைட்டுக்குபோய் cracked software download பண்ணி, அது execute ஆகசோலோ laptop பணால் ஆயிடுமே, அத பத்தி எழுதுனதுப்பா.

இத்த நானு, கூடாபுணர்தல (கூடாபுணர்வ) ‍மனசுல‌ வச்சு எழுதலன்னு சொன்னா நீ என்ன நம்பவாபோற…

{கூடாபுணர்தல் (கூடாபுணர்வு) ‍ ஹைய்யா, தமிழ்ல புது வார்த்தைய கண்டுபுடிச்சிட்டேன். அதில்லயும், அந்த வார்த்த அமைப்ப பாருங்க. கூடாம புணரமுடியுமா? ஆனா “வேண்டா”ன்னு பொருள் வர்றதுக்கு “கூடா”தான நல்ல முன் ஒட்டு; கூடா நட்பு, கூடாவொழுக்கம் மாதிரி. இந்த மாதிரி வார்த்தைங்கள literature மக்கள் ஏதோ சொல்லி வகைப்படுத்துவாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க}.

(Picture courtesy: http://thetruthfulman.files.wordpress.com/2009/09/couple-laptop2-lg-new.jpg&imgrefurl=)

என் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…

இது எனக்கு போறாத காலமா, இல்லை உங்களுக்கெல்லாம்மான்னு எனக்கு தெரியவில்லை.
ஆனா, என் பல நாள் சந்தேகங்கள் தீர்கின்றன / உறுதி பெறுகின்றன.

நான் பாட்டுக்கும், தேமேன்னு சந்தேகத்த என்னோட வச்சிக்கிட்டுதாங்க இருந்தேன்.
ஆனா, பாருங்க; அப்பத்தான் கொஞ்ச நாளு அத மறந்திருந்தேன், ஆனா ஏதோ ஒரு போரம்ல அதே சந்தேகத்த யாரோ கிளப்பிவிட்டு, நியாபகப்படுத்துனாங்க.

சரி, அந்த போரத்துலயாவது சந்தேகம் தீரும்னு பாத்தா அது வள்ளுவர் கொண்டையாட்டம் உறுதியானது தான் மிச்சம்.

டவுட், இதானுங்க.
as usual, திருக்குறள்ல.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
(குறள் 110, அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்)‌

இதுக்கு, எந்நன்றி அப்படீன்னா ‍எத்தனையோ வக நன்றி / நன்மை இருக்கு, அதுல எந்த வக
நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் உய்வு (அதாவது மன்னிப்பு / நல்வழி).

ஆனால், ஒருவர் செய்த நன்றி / நன்மையை மறந்த மகற்கு (அதாவது மக்களுக்கு) மன்னிப்பே / நல்வழியே கிடையாது. அப்பட்டீன்னு தான் (கிட்டதட்ட) எல்லாரும் சொல்லி வர்றாங்க.

நன்றியோ/ நன்மையோங்கிறதே ஒருத்தவங்க அடுத்தவங்களுக்கு செஞ்சாத்தான் உண்டு. தனக்குத்தானே செஞ்சிக்கிறதப்பத்தி பேச என்ன இருக்கு, இல்லையா.

அப்ப எங்கயோ பொருள் இடிக்குது.
இதுதாங்க என் பல நாள் டவுட்.

உற்றவன்…… குறள் மாதிரி இதுக்கு எனக்கு பொருள் உணர முடியல.
போரத்துலயும் விட கிடைக்கல.

ஆனா, அதிர்ஷ்ட வசமா, விட புலவர் முத்துலிங்கம் பேட்டி (திரும்பிப் பார்க்கிறேன், ஜெயா டிவி) வழியா கிடச்சது.

நம்ம, இளையராஜாவுக்கும் இதே டவுட் இருந்திருக்கு.
(ஹ…ஹ…டவுட்டாலஜில இப்ப நம்ம ரேன்ஜ் தெரியிதுங்களா)

புலவர கேட்டதுக்கு, “எனக்கு தெரியலயே”ன்னு சொல்லிட்டாராம்.

அப்புறம், இளையராஜாவே சொன்ன விளக்கம் என்னாண்ணா,
” நன்றிங்கிறதே அடுத்தவங்க செய்யிறது தான்.
இந்த குறள்ல “மகற்கு”ங்கிறத மக்கள்னு பொருள் பாக்குறப்ப,
நாட்டு மக்கள்னு பொருள் கொள்ளாம வீட்டு மக்கள் (அதாவது பிள்ளைகள்)
அப்படீன்னு பொருள் கொள்ளனும்.

இப்படி பாத்தா,
எந்த வக நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் ம‌ன்னிப்பு / நல்வழி. ஆனால், தன்னை பெற்று, வளர்த்த பெற்றோர் தனக்கு செய்த நன்றியை / நன்மையை மறந்த பிள்ளைகளுக்கு மன்னிப்போ / நல்வழியோ கிடையாது.”
அப்படீன்னு விளக்குனாராம்.

இதப்பத்தி நம்ம மயிலை மன்னார் அய்யாவுக்கு என்ன படுதுன்னு திரு. VSK அவர்கள‌ முதல்ல கேட்டிருவோம்.

இல்லறவியல்ல இந்த குறள் வர்றனால இந்த interpretation, ஏத்துக்கொள்ளப்படக்கூடியது தான்னு எனக்கும் படுது.

உங்களுக்கு என்ன படுது.

(ஏண்டா படுத்துறன்னா….?)

(Picture courtesy: http://www.nallpro.com/tamil/att1/ilayaraja.jpg)

ஏன்….. இப்படி…. செய்தேன்

இதோ, நான் குதிச்சிட்டேன்.

சாதாரணமா தெரிஞ்சாலும்
குதிச்ச பிறகு தான் தெரியிது,
சங்கடமும், கஷ்டமும்.

ஐயோ மூழ்க போகிறேன்.

இப்படி ஒரு முடிவ என் வாழ்க்கையில நான் எடுத்திருக்கக் கூடாது.
அவசரப்பட்டுட்டேன்.
அடுத்தவங்கள சாதாரணமா நினைச்சிருக்கக்கூடாது.
இப்ப சிந்திச்சி என்ன பிரையோஜனம்?
இந்த பாவம் சும்மா விடுமா?

அட கடவுளே, மூழ்க ஆரம்பித்து விட்டேன்.

நாளைக்கு என் சொந்தங்களுக்கோ,
பந்தங்களுக்கோ,
நண்பர்களுக்கோ
தெரிஞ்சால் என்ன பேசுவார்கள்…?

யோசித்துக் கொண்டிருக்கையிலேயே….
………………………………………………..
…………மூ………………………………….
………………ழ்……………………………..
………………….கி………………………….
………………………………………………..
…………………………வி………………….
………………………………ட்……………..
………………………………………………..
…………………………………..டேன்…….
………………………………………………..
………………………………………………..

Good knight Maha Jumbo coil
with காக்க காக்க‌
introductory theme BGM

அது என்னமோ தெரியலங்க,
நமக்கு எப்பவுமே சொந்த புத்தியே கிடையாதுங்க.

அடுத்தவன் என்ன பண்றான்னு பார்க்கவேண்டியது.
சரி பார்த்தமான்னு மூடிட்டு இல்லாம
ஆயிரம் நொட்ட சொல்ல வேண்டியது.
இப்படி ஒருத்தன் பண்ணா,
நீங்களே சொல்லுங்க, சுயமா சிந்திச்சி
எழுதுறவங்களுக்கு எரிச்சல் வர்றது நியாயம் தான.

சும்மா சொல்லக்கூடாதுங்க, நான் பாடா படுத்துனவங்க நிறைய பேறு.
மட்டறுத்தல வழங்குறதுக்கு wordpresss
சந்தோசப்படுதோ இல்லையோ
யுகபாரதி உட்பட பலர் சந்தோசப்படுவர்.

சில சமயம், அவங்க இடுகையை விட என் பின்னூட்டம்
lengthதியா இருக்கும்.
ஆனா அதுக்கெல்லாம் அசராம
“கண்ணா நாங்கெல்லாம் ரியல் வோர்ல்ட்லயே பனங்காட்டு Fox.
இந்த பதிவு உலகத்தில நீயெல்லாம்,…. இந்தா”ன்னு
தட்டு நிறைய pedigree கொடுத்துவங்களும்
kgjawarlal, uumm மாதிரி பலர்.

அதுக்காக சும்மா விட்ற முடியுமா?

மற தமிழனே,
மாசற்ற மாணிக்கமே,
மங்காத குலவிளக்கே,

கம்மாளர் கை
பொன்னே,
பொன்மணியே,
பொற்சரமே
பொங்கி வரும் புதுவெள்ளமே ன்னு

சின்ன புள்ளயில இருந்து
வீட்டில கேட்டு கேட்டு வளர்ந்தது
(பக்கத்து வீட்டு பாட்டி; அவ பேர புள்ளய கொஞ்சுற‌த‌)
வீண் ஆகுமா ?

அதுதான்,
உக்காந்து யோசிச்சேன்.
நீட்டா பிளான் போட்டேன்.
டேட்டா கேதர் பண்ணேன்.
அசெம்பிள் பண்ணேன்.
பல ஆங்கிள்ல அனலைஸ் பண்ணேன்.
ரிசல்ட்ட
பல தடவ
பல மெதட்ல
இன்டெர்பெர்ட் பண்ணி
எல்லா ஸ்டெப்சையும்
வேலிடேட் பண்ணாலும்
ஒரே கன்குளுஷன் தான் கிடைத்து.

அது

“குதிச்சிற்ரா கைப்புள்ள”

வாங்க…..வாங்க….

வணக்கம்.

நான் ஏன் blog ஆரம்பிச்சேன்னா…
இதுக்கு முன்னாடி blog   ஆரம்பிச்சவங்க‌ எல்லாம் என்ன பண்ணாங்க ?
என்ன பண்ணாங்க ?

கத சொன்னாங்களா,
புத்தி சொன்னாங்களா,
சமையல் சொல்லி தந்தாங்களா,
அனுபவத்த சொன்னாங்களா,
Joke சொன்னாங்களா,
புது விஷ‌யம் சொன்னாங்களா,
உண்மைய சொன்னாங்களா,
நாட்ட திருத்துனாங்களா,….

“டேய், நிறுத்து. இந்த ஈரவெங்காயம் எல்லாம் எதுக்கு இப்ப? நீ என்ன செய்யப்போற அத பத்தி மட்டும் பேசு”, அப்படின்னு நீங்க டென்ஷன் ஆகுறது எனக்கு புரியுது.
ஆனா பாருங்க, இப்படி நான் இழுவ போடும் போதே,
“என்ன செய்யப்போறான்னு தெரியாமலே வந்திட்டான்”னு உங்களுக்கு புரிஞ்ச்சிருக்க வேண்டாமா?

நான் கண்டிப்பா
serious matter   எதுவும் எழுத மாட்டேன்.
serious matter   எதுவும் எழுத மாட்டேன்.
serious matter   எதுவும் எழுத மாட்டேன்.

அப்படி ஏதாவது இருந்தா அது கண்டிப்பா நான் எழுதியதா இருக்காது.

என் நோக்கம் ஒண்ணே ஒண்ணு தான்.

தமிழ்ல தட்டச்சு பழகுறது தான்.
தமிழ்ல தட்டச்சு பழகுறது தான்.
தமிழ்ல தட்டச்சு பழகுறது தான்.

%d bloggers like this: