தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

Category Archives: அட‌

இரட்டை அர்த்த கவித…

நான் பாட்டுக்கும் சம்மா தாங்க இருந்தேன்.
(ஹலோ, உங்க மயிண்ட் வாய்ஸ்ஸ‌ ஆஃப் பண்ணுங்க.
“நீ என்னைக்கிடா சும்மா இருந்த”,ன்னு நீங்க நெனைக்குறது, எனக்கு நல்லா கேக்குது).

வேல்தர்மாவோட (நெருப்பணை) firewall இல்லாமல் தாயானாள், பாத்தேன். நல்லா இருந்துச்சு. சரி அப்டியே நாமளும் ஒரு ட்ரை பண்ணி பாப்பமேன்னு எழுதுனது தான் இந்த வசனம்…ச்சி..ச்சி…கவித.

நெருப்பாய் அணைக்கையில்
மஞ்சத்தில்
நெருப்பணையை மறந்திட்ட‌
நெஞ்சத்தில்

தவிப்புகள் தளரும் வரை
தரச்சான்றும் தேடார்
தாய் யார், தந்தை யாரென‌
தகவலும் வேண்டார்

தரவிறக்கமே சொர்க்கம்

தரம் இறங்கியது செயல்படின்
தரித்திரமே நிதர்சம்
தர்க்கமே மிச்சம்

இந்த வரிங்கோ, firewall protection இல்லாத லேப்டாப்ல கண்ட சைட்டுக்குபோய் cracked software download பண்ணி, அது execute ஆகசோலோ laptop பணால் ஆயிடுமே, அத பத்தி எழுதுனதுப்பா.

இத்த நானு, கூடாபுணர்தல (கூடாபுணர்வ) ‍மனசுல‌ வச்சு எழுதலன்னு சொன்னா நீ என்ன நம்பவாபோற…

{கூடாபுணர்தல் (கூடாபுணர்வு) ‍ ஹைய்யா, தமிழ்ல புது வார்த்தைய கண்டுபுடிச்சிட்டேன். அதில்லயும், அந்த வார்த்த அமைப்ப பாருங்க. கூடாம புணரமுடியுமா? ஆனா “வேண்டா”ன்னு பொருள் வர்றதுக்கு “கூடா”தான நல்ல முன் ஒட்டு; கூடா நட்பு, கூடாவொழுக்கம் மாதிரி. இந்த மாதிரி வார்த்தைங்கள literature மக்கள் ஏதோ சொல்லி வகைப்படுத்துவாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க}.

(Picture courtesy: http://thetruthfulman.files.wordpress.com/2009/09/couple-laptop2-lg-new.jpg&imgrefurl=)

என் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…

இது எனக்கு போறாத காலமா, இல்லை உங்களுக்கெல்லாம்மான்னு எனக்கு தெரியவில்லை.
ஆனா, என் பல நாள் சந்தேகங்கள் தீர்கின்றன / உறுதி பெறுகின்றன.

நான் பாட்டுக்கும், தேமேன்னு சந்தேகத்த என்னோட வச்சிக்கிட்டுதாங்க இருந்தேன்.
ஆனா, பாருங்க; அப்பத்தான் கொஞ்ச நாளு அத மறந்திருந்தேன், ஆனா ஏதோ ஒரு போரம்ல அதே சந்தேகத்த யாரோ கிளப்பிவிட்டு, நியாபகப்படுத்துனாங்க.

சரி, அந்த போரத்துலயாவது சந்தேகம் தீரும்னு பாத்தா அது வள்ளுவர் கொண்டையாட்டம் உறுதியானது தான் மிச்சம்.

டவுட், இதானுங்க.
as usual, திருக்குறள்ல.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
(குறள் 110, அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்)‌

இதுக்கு, எந்நன்றி அப்படீன்னா ‍எத்தனையோ வக நன்றி / நன்மை இருக்கு, அதுல எந்த வக
நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் உய்வு (அதாவது மன்னிப்பு / நல்வழி).

ஆனால், ஒருவர் செய்த நன்றி / நன்மையை மறந்த மகற்கு (அதாவது மக்களுக்கு) மன்னிப்பே / நல்வழியே கிடையாது. அப்பட்டீன்னு தான் (கிட்டதட்ட) எல்லாரும் சொல்லி வர்றாங்க.

நன்றியோ/ நன்மையோங்கிறதே ஒருத்தவங்க அடுத்தவங்களுக்கு செஞ்சாத்தான் உண்டு. தனக்குத்தானே செஞ்சிக்கிறதப்பத்தி பேச என்ன இருக்கு, இல்லையா.

அப்ப எங்கயோ பொருள் இடிக்குது.
இதுதாங்க என் பல நாள் டவுட்.

உற்றவன்…… குறள் மாதிரி இதுக்கு எனக்கு பொருள் உணர முடியல.
போரத்துலயும் விட கிடைக்கல.

ஆனா, அதிர்ஷ்ட வசமா, விட புலவர் முத்துலிங்கம் பேட்டி (திரும்பிப் பார்க்கிறேன், ஜெயா டிவி) வழியா கிடச்சது.

நம்ம, இளையராஜாவுக்கும் இதே டவுட் இருந்திருக்கு.
(ஹ…ஹ…டவுட்டாலஜில இப்ப நம்ம ரேன்ஜ் தெரியிதுங்களா)

புலவர கேட்டதுக்கு, “எனக்கு தெரியலயே”ன்னு சொல்லிட்டாராம்.

அப்புறம், இளையராஜாவே சொன்ன விளக்கம் என்னாண்ணா,
” நன்றிங்கிறதே அடுத்தவங்க செய்யிறது தான்.
இந்த குறள்ல “மகற்கு”ங்கிறத மக்கள்னு பொருள் பாக்குறப்ப,
நாட்டு மக்கள்னு பொருள் கொள்ளாம வீட்டு மக்கள் (அதாவது பிள்ளைகள்)
அப்படீன்னு பொருள் கொள்ளனும்.

இப்படி பாத்தா,
எந்த வக நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் ம‌ன்னிப்பு / நல்வழி. ஆனால், தன்னை பெற்று, வளர்த்த பெற்றோர் தனக்கு செய்த நன்றியை / நன்மையை மறந்த பிள்ளைகளுக்கு மன்னிப்போ / நல்வழியோ கிடையாது.”
அப்படீன்னு விளக்குனாராம்.

இதப்பத்தி நம்ம மயிலை மன்னார் அய்யாவுக்கு என்ன படுதுன்னு திரு. VSK அவர்கள‌ முதல்ல கேட்டிருவோம்.

இல்லறவியல்ல இந்த குறள் வர்றனால இந்த interpretation, ஏத்துக்கொள்ளப்படக்கூடியது தான்னு எனக்கும் படுது.

உங்களுக்கு என்ன படுது.

(ஏண்டா படுத்துறன்னா….?)

(Picture courtesy: http://www.nallpro.com/tamil/att1/ilayaraja.jpg)

திருக்குறள்,….தொடரும் சந்தேகங்கள்; (தமிழய்யாவின் சதியா…?)

(திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….? என்ற எனது இடுகையின் தொடர்ச்சி)

இந்த அடிப்பொடியானுக்கு திருக்குறள்ல வந்த சந்தேகத்துக்கெல்லாம் நீங்களும் உங்க நண்பர்களும் மெனக்கெட்டுதுக்கு நன்றிங்க.
ரொம்ப மெனக்கெட்ட திரு. VSK & மயிலை மன்னார் அவர்களுக்கும்
ரொம்ப ரொம்ப நன்றிங்க.

ஆனா எனக்குதான் குழப்பம் விட்டபாடில்ல. அதுனால தொடர்றேன்.
எனக்கு இப்ப திரு. VSK & மயிலை மன்னாரை (அட நீங்களும்தாங்க) விட்டா வேற கதி இல்லீங்க.

அதுனால இந்த குறள் சம்ம‌ந்தமா எனக்கிருக்குற எல்லா சந்தேகத்தையும் கேட்டுர்றேங்க.

1. “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து” குறள்ல கடைசியா வர்ற மருந்து,
practice of medicine, பொருள் படும்னா, அப்ப இந்த குறள்
practice of medicine க்கு introduction மாதிரி ஆகுது.
அந்த மாதிரி வர்றப்ப, மருந்துங்குற அதிகாரத்துல
இது தானே முதல் குறளா வரணும்னு ஒரு சந்தேகங்க‌.

இத விட்டுட்டு,
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”, ங்குறது முதலா இருக்கே.

2. மருந்து அப்படீங்கற அதிகாரத்துல தான இந்த குறளே வருது. அப்ப,
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே ” அப்படின்னு முடிச்சாலே பொருள் வெளங்கிடுமே.

இல்லன்னா, அப்பால்ங்குற வார்த்த இல்லாம ……
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
நாற்கூற்றே மருந்து”னு
சொன்னாலும், இதுவர பெரியவங்க சொல்ற பொருள் வந்திருதே…….

ஐயன் அவசியமில்லாம வார்த்தய உபயோகப்படுத்தமாட்டாருன்னு
எல்லோரும் நம்புறனால தான் இப்படி அனத்துறேங்க.

3. மருந்துங்குற அதிகாரத்துல வள்ளுவர் அய்யா, முடிஞ்சவரைக்கும்
ஔஷதத்த ஒதுக்கியே தான் வைக்கிறாருன்னு நினைக்கிறேன்.

ஔஷதத்த பத்தி உயர்வா ஒரு குறள் கூட இந்த அதிகாரத்துல இல்ல.

மேலும், “மருந்தென வேண்டாவாம்” அப்படீன்னு பொட்டுல அடிச்ச மாதிரிவேற சொல்லாடியிருக்காரு. அதுனாலயும் தான் எனக்கு குழப்பம் வந்ததுங்க.

இப்ப இந்த 3 பாயிண்டையும் படிச்சபொறவு,

“நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான், இவற்றையெல்லாம் கடந்து, மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்”.

அப்படீங்குற உரை ஏற்புடையதா, இல்லையான்னு சொல்லுங்க ?

தொடர்ந்து சங்கடம் கொடுக்குறதுக்கு மன்னிக்கணும்.

(“டேய், உன்ன யார்றா இப்படியெல்லாம் யோசிக்க சொல்றது”ன்னு டென்ஷனாவுரவங்க, என்ன உட்டுருங்க. கட்டுர முழுக்க “சீதை”ய “சிதை”ன்னு எழுதிவச்சாலும், கோபப்படாம, பொறுமையா எடுத்து சொல்லி, பரிவோட தமிழ் பாடம் எடுத்து, என்ன மாதிரி தத்தாரிங்கயெல்லாம் பாஸாகுற அளவுக்கு முன்னேத்திவிட்ட எங்க பள்ளிக்கூட தமிழய்யாட்ட‌ போய் நியாயம் கேளுங்க. )

திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….?

அண்ணே, அண்ணே, எனக்கு வெகு நாளா ஒரு சந்தேகம்ணே…..

எதுலடா….?

திருக்குறள்லதேய்ங்…

பேஷ், பேஷ். அந்த ரேஞ்சுக்கு டெவலப் ஆகிட்டயாடா கண்ணா, நீ…!
OK. proceed. what is your doubt?

திருக்குறள் எண் 950, அதிகாரம் ‍ மருந்து, பால் பொருட்பால்….

டேய், Stop. நான் என்ன சென்ஸஸ் எடுக்க வந்த ஆளா?
கண்ட விவரம் எல்லாம் எனக்கெதுக்கு.
குறள சொல்லு, கேள்விய கேளு.‌

அண்ணே, அதுல வள்ளுவர் என்ன சொல்றார்ன்னா…
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து

இப்ப என்ன இதுக்கு உனக்கு உரை என்னான்னு தெரியணூமா?
kural.muthu.org, போ,
thirukkural.com போ, எல்லார் உரையும் அதுல இருக்கு.

அதில்லதாண்ணே சந்தேகம்.
இந்த குறளுக்கு
கலைஞர் உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
மு.வ உரை:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
English Explanation:
Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions (Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis )

இதுல பாத்தீங்கண்ணா, எல்லாருமே மருத்துவமுறை நாலு வகையாக அமைந்துள்ளதுன்னு சொல்றாங்க.
ஆனா, அந்த நாலாவது வகை கம்பௌன்டர்ன்னு ஒரு சாரரும், நர்ஸம்மான்னு ஒரு சாரரும் பொருள் வர்ற மாதிரி சொல்றாங்களே.
அந்த நாலாவது வக எதுண்ணே…?

அடேய், இப்பத்தான் விஞ்ஞானம் டெவலப்பாயிருச்சி.
அந்த காலத்துல ஏது கம்பௌன்டரு, ஏது நர்ஸம்மாங்க.
முன்னாடி காலத்துல வைத்தியர் கூடவே வர்றவரு மருந்த அரச்சி தருவாரு.
அவர கம்பௌன்டருன்னு சொன்னா அப்ப வீட்ல பக்கத்துல இருந்து கவனிச்சிக்குற ஆளையா நர்ஸுன்னு சொல்றது.
மருந்த வேளாவேளைக்கு சரியான அளவுல சரியான பதத்துல யார் நோயாளிக்கு கொடுக்குறாங்களோ அவங்க தான் அந்த நாலாவது வக.

என்னமோ சொல்றீங்கண்ணே, ஆனா எனக்கென்ன்மோ இந்த நாலு உரையுமே தப்புன்னு தோணுது.

ஏண்டா திருக்குறள்லயே தப்பு, ரைட்டுன்னு சொல்ற அளவுக்கு நீ வந்துட்டயா. சொல்றா என்ன தப்பு?

அண்ணே,
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து,
ங்குற குறள்ல இவங்க எல்லாரும் உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான்னு பிரிச்சி படிக்குறாங்க.
அப்பிடி படிச்சா அப்பால் நாற்கூற்றே ங்கிறதோட மேட்டர் முடிஞ்சிச்சு.
மருந்து ங்கிற வார்த்த எக்ஸ்டிரா ஆகுது.
அப்படியில்லாம உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று,
அப்பால் ‍ அதாவது அதற்கு அடுத்து, அதை கடந்து
நாற்கூற்றே மருந்து ‍‍‍‍‍ நாலாவது வகையே மருந்து.
நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான்
மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்.
இப்படியும் சொல்லலாம்ணே.

என்ன சொல்லலாம், கொல்லலாம். போடா வெட்டிப்பயலே,
அப்புடியே பஸ் ஏறி கோயமுத்தூர் போ.
ரொம்ப பேர் கூட்டம் கூட்டமா வந்திருப்பாங்க.
அங்க போய் சத்தம் போட்டு இத சொல்லு, நல்லா வெளங்க வப்பாங்க.

சரி சரி டென்ஷனாகாதீங்கண்ணே. ஒரு சிம்பிள் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
இந்த குறளுக்கு
போப் அய்யா உர மாதிரியேதான் பாப்பைய்யா அய்யா உர இருக்கு.
மு.வ ‌அய்யா உர மாதிரியேதான் கலைஞர் அய்யா உர இருக்கு.
பெருசா வித்தியாசம் இல்லயே. அப்புறம் ஏண்ணே இவங்களும் ….?

அண்ணே அண்ணே ஓடாதீங்கண்ணே,
பதில் சொல்லிட்டு போங்கண்ணே….
பதில் சொல்லிட்டு போங்கண்ணே…
……….

இந்த இடுக ரொம்ப மொக்கத்தனமா இருந்தாலும்,
இந்த குறளக்கு இப்படியும் பொருள் சொல்லலாமான்னு
உண்மையிலேயே ஒரு சந்தேகம் இருக்கு, எனக்கு.

தமிழ் ஆர்வலர்களும், தமிழ் பெரியவங்களும் கொஞ்சம்
இந்த அடிப்பொடியானுக்கு கருத்து சொன்னா நல்லாயிருக்கும்….

(Picture courtesy: http://www.indiaglitz.com)

32 நாள் தள்ளிருச்சு….

ஆமாங்க, period 32 நாள் ஆயிருச்சு…. சந்தோசமாதான் இருக்கு.
இவர் கெடைக்க நானும் கொடுத்துவச்சிருக்கணும் தான்.
ஒரு பொண்ணு ஒருத்தன கைபுடிச்சி வந்த பிறகு
காலண்டர பொரட்டுறப்ப
முத தடவையா 32 நாள் தள்ளிருச்சுன்னு
தெரியிறப்ப எவ்வளவு பரவசமா இருக்கும்.

கொஞ்ச நாளாவே, இவன் எங்க ஏரியாவுக்கு அடிக்கடி
வந்துட்டு போயிட்டு இருந்தான். ஒரு சிலர் வீட்டு வாசல்ல
உக்காந்து எதுவாவது பேசுவான்.
சில சமயம், sentimentடா பேசுவான்
சில சமயம், materialisticஆ பேசுவான்.
சில சமயம், philosophy
சில சமயம், science
சில சமயம், crisp
சில சமயம், வளவளான்னு….
ஆள் பாக்க என்னமோ “சொட்ட சுப்பு”
மாதிரி தான் இருப்பான், இருந்தாலும் இவன்ட்ட ஏதோ மேட்டர்
இருக்குன்னு எங்க காலனி ஆளுங்க கண்டுக்குனாங்க.

இவன் திண்ண பேச்சுக்கு தான் லாயக்கு, வேலைக்கு ஆகமாட்டான்னு
நெனச்ச ஒரு நாள் படாருன்னு வந்து என்ன கைபுடிச்சார்.
இவர் தான் எங்க வீட்ல பேசுனார். இவர் ஏற்கனவே preplanedஆ இருந்ததால
நாங்க registeration formalitiesமுடிஞ்சப்புறம் தான் எங்க மனவிழாவ
பத்தி எங்க காலனி ஆளுங்களுக்கே தெரிஞ்சது. விசயம் தெரிஞ்ச உடனே
வாழ்த்துறதுக்கு எங்க காலனி பெரியவங்க, பக்கத்து காலனி பெரியவங்க,
எங்க friendsந்னு பெரிய கூட்டமே வர ஆரம்பிச்சிட்டாங்க.
வந்தவங்கள கவனிக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருச்சு.
அதுனால‌ எங்க first nightல இவர்…………… வேண்டாம்,
நீங்க அப்புறம் கிண்டல் பண்ணுவீங்க.

ஆனா இவங்க வீட்ல இருந்து தான் இன்னைக்கி வரைக்கும்
யாரும் வரல. ஏன்னு கேட்டா இப்போதைக்கு அவங்களுக்கு
தெரியவேண்டாம்ன்னு மட்டும் சொல்றாங்க.
இவங்க வீட்டுகாரங்களும் நல்லவங்கதாங்க.
ஆனா, இவர் பண்ண காரியத்துக்கு யார் வூட்லதான்
எடுத்த உடனே சந்தோஷ படுவாங்க. அதுக்காக எத்தன நாள்
இப்படியே வாழமுடியும். இப்பவோ 32 நாள் தாண்டியாச்சு…..

அதாங்க எனக்கு கொஞ்சம் சங்கட்டமா இருக்கு. அதே மாதிரி
கொஞ்சம் சங்கட்டமான இன்னொரு விஷயம்……..
பசங்கள்ள இவர் கொஞ்சம் கூச்சப்பட்ற டைப்.
எத செய்யிறதுக்கும் ரொம்ப தயங்குறார்.
இதுவரைக்கும் 9 தடவ தான்…….

மத்தபடி என்ன நல்லா பாத்துக்குறார்.

எங்க வாழ்க்க இப்படியே போன கூட போதுங்க…..
ஆனா, கண்டிப்பா நாங்க இன்னும் நல்லா வாழ்வோம்ன்னு எனக்கு நம்பிக்க இருக்குங்க….

தினைக்கும் விருந்தாளிகளுக்கும் பஞ்சம் இல்ல.
கடல்தாண்டி போற தேசத்துல இருந்துகூட நிறையபேர் வருவாங்க.
இது வரைக்கும் வந்தவங்க ஒரு ரெண்டாயிரம் பேராவது இருக்கும்.
வந்திட்டு போனவங்க கடுதாசி போட்டு, இவர் பதில் போட்டுன்னு அது தாண்டும் நூற…..

இப்படியெல்லாம் உங்க கிட்ட
என் பதிவு பேசினா
நான் இன்னாபா பண்றது……

ராணி 6, ராஜா யாரு? IN; மானாட மயிலாட OUT

(டைடில்லயே மேட்டர் ஓவர்.)

இன்று ப்ரியங்காவிடம் நான்…

இன்று ப்ரியங்காவிடம் நான்
மனம் திறந்து சொல்லிவிட‌ப்போகிறேன்.
இப்படி என்னை மெல்ல, மெல்ல கொல்லாதே.
இந்த அவஸ்தையை இனிமேலும் பொருக்க முடியாது.

நேருக்கு நேராக அவள் கண்களை பார்த்து சொல்வதா, அல்லது
அவள் முன் மண்டியிட்டு கைகள் குவித்து சொல்வதா?

இந்த PG medical research instituteடில் செகண்ட் இயர் மாணவி, ப்ரியங்கா. நானோ
இங்கு வந்து சேர்ந்து நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை.
அவள் batchmate கள் மட்டும் அல்ல ஆசிரியர்கள் சிலரே
அவளுடன் பேச, பழக ஆசைபடுவார்கள்.
ஆனால், இங்கு வந்து சேர்ந்த நாளில் இருந்தே நாங்கள்
இருவரும் பல நாள் பழகியவர்கள் போல, எந்தவித தயக்கமும்
இன்றி பழக ஆரம்வித்துவிட்டோம்.

சொல்லப்போனால் ப்ரியங்கா என்னை பார்க்கும் பார்வையில்
இப்போது மெல்ல, மெல்ல வித்தியாசம் தெரிகிறது.

என்னுள், அவள் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்
எனக்கும் நன்றாகவே தெரிகிறது. சில நாட்களாக
சரியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை.
அவ்வப்போது, என்ன செய்கிறேன், ஏது செய்கிறேன் என்று
எனக்கே தெரியாமல் அப்படியே மயங்கி இருப்பேன்.

நான் இங்கு வந்து சேர்ந்த புதிதில், என் சீனியர் ஒருவனும்,
இப்படித்தான் இருந்தான். நான் அவனை நக்கலாக சிரிப்பதை
பார்த்து ஒரு நாள், “தம்பி, இது எல்லாம் அனுபவிச்சாத்தான்டா புரியும்”,
என்றான். இன்று புரிகிறது.

இதோ, ப்ரியங்கா வந்துவிட்டாள்.
ஆனால், கூடவே அவள் தந்தையுமான ப்ரொபஸர்.
என்னை பார்த்ததும் ப்ரியங்கா சற்று தயங்கி நின்றாள்.

“It’s, OK. Your decision is right, proceed”, என்றார்.
ப்ரியங்கா என்னை நெருங்கி வந்து,
என் கண்களை பார்த்து, “Sorry”, என்றாள்.

என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்ளும்
முன்னர், ஏதெதோ நடந்துவிட்டது.

“Thanks, Priyanka”,
என்று கண்ணீர் சிந்தியபடி
கடைசியாக, மெல்ல கண்களை மூடிய நான்;
புதிய மருந்துகளின் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டு
கருணைகொலை செய்யப்பட்ட‌
ஒரு வில‌ங்கு.

ஏன்….. இப்படி…. செய்தேன்

இதோ, நான் குதிச்சிட்டேன்.

சாதாரணமா தெரிஞ்சாலும்
குதிச்ச பிறகு தான் தெரியிது,
சங்கடமும், கஷ்டமும்.

ஐயோ மூழ்க போகிறேன்.

இப்படி ஒரு முடிவ என் வாழ்க்கையில நான் எடுத்திருக்கக் கூடாது.
அவசரப்பட்டுட்டேன்.
அடுத்தவங்கள சாதாரணமா நினைச்சிருக்கக்கூடாது.
இப்ப சிந்திச்சி என்ன பிரையோஜனம்?
இந்த பாவம் சும்மா விடுமா?

அட கடவுளே, மூழ்க ஆரம்பித்து விட்டேன்.

நாளைக்கு என் சொந்தங்களுக்கோ,
பந்தங்களுக்கோ,
நண்பர்களுக்கோ
தெரிஞ்சால் என்ன பேசுவார்கள்…?

யோசித்துக் கொண்டிருக்கையிலேயே….
………………………………………………..
…………மூ………………………………….
………………ழ்……………………………..
………………….கி………………………….
………………………………………………..
…………………………வி………………….
………………………………ட்……………..
………………………………………………..
…………………………………..டேன்…….
………………………………………………..
………………………………………………..

Good knight Maha Jumbo coil
with காக்க காக்க‌
introductory theme BGM

அது என்னமோ தெரியலங்க,
நமக்கு எப்பவுமே சொந்த புத்தியே கிடையாதுங்க.

அடுத்தவன் என்ன பண்றான்னு பார்க்கவேண்டியது.
சரி பார்த்தமான்னு மூடிட்டு இல்லாம
ஆயிரம் நொட்ட சொல்ல வேண்டியது.
இப்படி ஒருத்தன் பண்ணா,
நீங்களே சொல்லுங்க, சுயமா சிந்திச்சி
எழுதுறவங்களுக்கு எரிச்சல் வர்றது நியாயம் தான.

சும்மா சொல்லக்கூடாதுங்க, நான் பாடா படுத்துனவங்க நிறைய பேறு.
மட்டறுத்தல வழங்குறதுக்கு wordpresss
சந்தோசப்படுதோ இல்லையோ
யுகபாரதி உட்பட பலர் சந்தோசப்படுவர்.

சில சமயம், அவங்க இடுகையை விட என் பின்னூட்டம்
lengthதியா இருக்கும்.
ஆனா அதுக்கெல்லாம் அசராம
“கண்ணா நாங்கெல்லாம் ரியல் வோர்ல்ட்லயே பனங்காட்டு Fox.
இந்த பதிவு உலகத்தில நீயெல்லாம்,…. இந்தா”ன்னு
தட்டு நிறைய pedigree கொடுத்துவங்களும்
kgjawarlal, uumm மாதிரி பலர்.

அதுக்காக சும்மா விட்ற முடியுமா?

மற தமிழனே,
மாசற்ற மாணிக்கமே,
மங்காத குலவிளக்கே,

கம்மாளர் கை
பொன்னே,
பொன்மணியே,
பொற்சரமே
பொங்கி வரும் புதுவெள்ளமே ன்னு

சின்ன புள்ளயில இருந்து
வீட்டில கேட்டு கேட்டு வளர்ந்தது
(பக்கத்து வீட்டு பாட்டி; அவ பேர புள்ளய கொஞ்சுற‌த‌)
வீண் ஆகுமா ?

அதுதான்,
உக்காந்து யோசிச்சேன்.
நீட்டா பிளான் போட்டேன்.
டேட்டா கேதர் பண்ணேன்.
அசெம்பிள் பண்ணேன்.
பல ஆங்கிள்ல அனலைஸ் பண்ணேன்.
ரிசல்ட்ட
பல தடவ
பல மெதட்ல
இன்டெர்பெர்ட் பண்ணி
எல்லா ஸ்டெப்சையும்
வேலிடேட் பண்ணாலும்
ஒரே கன்குளுஷன் தான் கிடைத்து.

அது

“குதிச்சிற்ரா கைப்புள்ள”

%d bloggers like this: