தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

வரதட்சணை,….கொடுமை !?!

இனி பொறுக்க முடியாதுங்க.

நானும் பாத்துக்கிட்டே இருக்கேன், இந்த பிரச்சனைக்கு யாரும் ஒரு counter கொடுக்குற மாதிரி தெரியல. அட பொண்ணுங்கள இந்த விசயத்துல நம்ப முடியாது, உண்ம தான். ஆனா இந்த பசங்க. ம்ஹூம், வேஸ்ட் ஃபெளோஸ்.

ஆனா, நான் மானஸ்தன்ய்யா.
விடமாட்டேன்.

பிரச்சன இது தாங்க, எந்த ஆல மரத்தடியில வரதட்சண பத்தி கூட்டம் போட்டாலும், உடனே இந்த பொண்ணுங்க, ” நாங்க பணம் கொடுத்து பையன வாங்குறோம்”, அதாக்கும், இதாக்கும்னு வரதட்சண கொடுக்குறத பத்தி ஓவரா சவுண்ட் விட வேண்டியது.

வரதட்சண கொடுத்துட்டா அதுக்காக எந்நேரமும் தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடணுமா, என்ன.

(Excuse me பொண்டாட்டி மேடம். கொஞ்சம் என் தலையுல இருந்து ஒரு நிமிசம் கீழ இறங்குனீங்கன்னா, கழுத்துல சொடக்கெடுத்துப்பேன். Thank you, பொண்டாட்டி மேடம்.)

நான் மானஸ்தன்ய்யா.
நான் இதுக்கு ஒரு பதில கண்டுபுடிக்காம விடமாட்டேன்.

பகல் முழுக்க‌ பரங்கிமல மேல மல்லாக்கா படுத்து யோசிச்சேன்.
இராத்திரி முழுக்க முக்காடு போட்டு உக்காந்து யோசிச்சேன்.

அஃக, புடிச்சோம்ல……counteru…

குடும்பங்குற institutionல மெரிட்ல அட்மிசன் கெடைக்காம management quotaல captitation feeச கட்டி அட்மிட் ஆகுற ஆளுங்கய்யா இவங்க. என்ன தான் captitation fees கட்டுனாலும், institution சொல்றபடி obedientட்டா இருந்தாதான் உருப்பட முடியும். அத விட்டுட்டு சும்மா, capitation fees கொடுத்தேன், வரதட்சண‌ கொடுத்தேன்னு கூவுனா,…

எப்பூடி…

இனி பல்லுமேல நாக்க போட்டு,
மெரிட்ல குவாலிஃபையாகமுடியாத இந்த பொண்ணுங்க
ஆம்புளைங்கள பாத்து எதுனா சவுண்ட் விட்டா,
பொறுக்க மாட்டான் இந்த மானஸ்தன்.

ஹா….ஹா…ஹா…..

(ஐய்யோ….ஐயோ…ஐய்யோ
உணர்ச்சிவசப்பட்டேனே உணர்ச்சிவசப்பட்டேனே.

ஏற்கனவே கட காத்து வாங்குது,
இதுல தப்பித்தவறி இந்த பக்கம் வர்ற தாய்குலங்களும்
இத பாத்தா டென்ஷனாயிடுமே.

ஆ..ஆ…ஆ…பொண்டாட்டி மேடம்,
நீங்க எப்படி இந்த பக்கமா………….
Re-Recording sound….. ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் )

ப்ளீஸ், உங்க எல்லார்கிட்டயும் ஒரு சுமால் ரெக்குவஸ்ட்டு. ஒரு ரெண்டு வாரத்துக்கு பழைய சாதத்த கழனிப்பானையில ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு தடவ வாசல் பக்கம் இந்த மானஸ்தன் இருக்கானான்னு ப்ளீஸ் ஒரு எட்டு பாத்துடுங்க………

டிஸ்கி: இது முழுக்க, முழுக்க புனைவு. வெறும் நகைச்சுவைகாக மட்டும்.
(ஆ… உமி வச்சி ஒத்தடம் கொடுத்தும் மண்டையில வீக்கம் வத்தலயே)

Picture without dialouges, courtesy: http://www.chinasmack.com/2008/stories/married-for-1-year-beaten-by-wife-9-times.html

27 responses to “வரதட்சணை,….கொடுமை !?!

 1. படைப்பாளி 14:46 இல் ஜூலை 13, 2010

  ///ப்ளீஸ், உங்க எல்லார்கிட்டயும் ஒரு சுமால் ரெக்குவஸ்ட்டு. ஒரு ரெண்டு வாரத்துக்கு பழைய சாதத்த கழனிப்பானையில ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு தடவ வாசல் பக்கம் இந்த மானஸ்தன் இருக்கானான்னு ப்ளீஸ் ஒரு எட்டு பாத்துடுங்க////

  பரவால்ல நண்பா..நீ தெளிவான ஆள்தான்..பக்கவீட்டு புண்ணியத் திலயாவது பசியாறிடுவ…
  என் நெலம கொஞ்சம் மோசம்..பக்கத்து வீட்டுக் காரிங்களோட ஏற்கனவே சண்ட…

 2. Advocate Jayarajan 17:21 இல் ஜூலை 13, 2010

  அடக்கி வாசிங்க மாப்பிள்ளே..

 3. மீனா சங்கரன் 03:33 இல் ஜூலை 14, 2010

  அசத்தலா எழுதறீங்க சவுண்ட். ஆர்.!

  சிரிச்சுகிட்டே படிச்சேன். வாழ்த்துக்கள், நிறைய எழுதுங்க!

 4. Pingback: வரதட்சணை,….கொடுமை !?! : VALAICHARAM

 5. kumar 13:54 இல் ஜூலை 14, 2010

  என்ன கொடும சார் இது….

  ஆஹா, அதுக்குள்ள லாயருங்க எல்லாம் லைன் கட்டிட்டாங்களா?

 6. 498ஏ அப்பாவி 16:22 இல் ஜூலை 14, 2010

  நண்ப​ரே
  தற்​பொழுது நாட்டில் நடக்கும் வரதட்ச​ணை ​கொடு​மைகை​ளை கீழ்கண்ட இ​ணையபக்கத்தில் ​சென்று பார்​வையிடவும்

  http://tamil498a.com

  • soundr 22:17 இல் ஜூலை 14, 2010

   என்ன பண்றதுங்க, நல்ல நோக்கத்தோட கவர்மென்ட் சட்டம் கொண்டுவர்றாங்க.
   ஆனா, சமயத்துல அத சிலர் தவறா பயன்படுத்துறாங்க‌.
   ……..
   (ஆனா, இந்த மொக்க கடையில வந்து சீரியஸா பின்னூட்டம் போட்டுட்டீங்களே….)

 7. Gayathri 18:15 இல் ஜூலை 15, 2010

  Miga miga arumaiyaana nagaichuvaiyaana padivu…right thaanganna ennavida unga mokka super mokka…mmm ini daily varen…kalakala irukku…itha padicha endha thaikulathukkum kovame varathu..siripputhan varumm…vazhthukkal

  • soundr 18:38 இல் ஜூலை 15, 2010

   //itha padicha endha thaikulathukkum kovame varathu..siripputhan varum//
   அப்பாடா, வயித்துல பால வார்த்தீங்க.

   தாய்குலங்களின் உள்ளம் கவர்ந்த நாயகன் வார்த்தை….வாழ்க..வாழ்..

   அய்யோ, பொண்டாட்டி மேடம், மறுபடியும் நீங்க….
   (ணங்..ணங்..ணங்..ணங்..ணங்..ணங்)

 8. adhithakarikalan 10:48 இல் ஜூலை 16, 2010

  பரங்கிமல மேல மல்லாக்கா படுத்து யோசிச்சா இப்டி எல்லாம் எழுத வருமா?

 9. manguniamaicher 10:48 இல் ஜூலை 17, 2010

  உங்க வீட்ட்ளையும் பொண்டாட்டி மேடம் , தலைல உட்கார்ந்து இருப்பாங்களா ???

  சேம் பிளட்

  • soundr 14:08 இல் ஜூலை 17, 2010

   //உங்க வீட்ட்ளையும் பொண்டாட்டி மேடம் , தலைல உட்கார்ந்து இருப்பாங்களா ???

   சேம் பிளட்//

   வாங்க…வாங்க…
   (விஜயாஷேஸ மகால்ல கல்யாணத்துக்கு வந்தவங்கள கூப்பிடற மாதிரி என்னா சந்தோஷம்???)
   🙂

 10. kavisiva 13:29 இல் ஜூலை 17, 2010

  இதுக்குப் பேர்தான் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறதோ?!

 11. துளசி கோபால் 15:35 இல் ஜூலை 19, 2010

  ஹைய்யோ ஹைய்யோ:-)))))))))))))))

  எனக்குத்தான் சான்ஸ் கிடைக்கலை.

  மெரிட்லே இடம் கிடைச்சுருச்சு!!!!

  அதுக்காக……………….. வுட்டுறமுடியுதா? போரடிக்காதா?

  அப்பப்ப ஏறி கொஞ்ச நேரம் உக்காந்துக்குவேன்.

  • soundr 17:52 இல் ஜூலை 19, 2010

   //அதுக்காக……………….. வுட்டுறமுடியுதா? போரடிக்காதா? //

   🙂

   நன்றி துளசி கோபால். வருகைக்கும் கருத்துக்கும்.

 12. சி.கருணாகரசு 19:47 இல் ஜூலை 19, 2010

  நல்ல நகைச்சுவை…. பாராட்டுக்கள்.

 13. குந்தவை 15:54 இல் செப்ரெம்பர் 14, 2010

  //குடும்பங்குற institutionல மெரிட்ல அட்மிசன் கெடைக்காம management quotaல captitation feeச கட்டி அட்மிட் ஆகுற ஆளுங்கய்யா இவங்க. என்ன தான் captitation fees கட்டுனாலும், institution சொல்றபடி obedientட்டா இருந்தாதான் உருப்பட முடியும். அத விட்டுட்டு சும்மா, capitation fees கொடுத்தேன், வரதட்சண‌ கொடுத்தேன்னு கூவுனா,…//

  ha…ha…. ஆகா…. உங்களையும் வித்துட்டாங்க…. சரி சரி விடுங்க… no tension. இதெல்லாம் அரசியல்ல சகஜம் அப்பா

  • vaarththai 23:23 இல் ஒக்ரோபர் 14, 2010

   //ha…ha…. ஆகா…. உங்களையும் வித்துட்டாங்க…. சரி சரி விடுங்க… no tension. இதெல்லாம் அரசியல்ல சகஜம் அப்பா//

   இல்ல…இல்ல…பொதுமக்களே இவங்க சொல்றத நம்பாதீங்க…

soundr க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: