தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

என் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…

இது எனக்கு போறாத காலமா, இல்லை உங்களுக்கெல்லாம்மான்னு எனக்கு தெரியவில்லை.
ஆனா, என் பல நாள் சந்தேகங்கள் தீர்கின்றன / உறுதி பெறுகின்றன.

நான் பாட்டுக்கும், தேமேன்னு சந்தேகத்த என்னோட வச்சிக்கிட்டுதாங்க இருந்தேன்.
ஆனா, பாருங்க; அப்பத்தான் கொஞ்ச நாளு அத மறந்திருந்தேன், ஆனா ஏதோ ஒரு போரம்ல அதே சந்தேகத்த யாரோ கிளப்பிவிட்டு, நியாபகப்படுத்துனாங்க.

சரி, அந்த போரத்துலயாவது சந்தேகம் தீரும்னு பாத்தா அது வள்ளுவர் கொண்டையாட்டம் உறுதியானது தான் மிச்சம்.

டவுட், இதானுங்க.
as usual, திருக்குறள்ல.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
(குறள் 110, அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்)‌

இதுக்கு, எந்நன்றி அப்படீன்னா ‍எத்தனையோ வக நன்றி / நன்மை இருக்கு, அதுல எந்த வக
நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் உய்வு (அதாவது மன்னிப்பு / நல்வழி).

ஆனால், ஒருவர் செய்த நன்றி / நன்மையை மறந்த மகற்கு (அதாவது மக்களுக்கு) மன்னிப்பே / நல்வழியே கிடையாது. அப்பட்டீன்னு தான் (கிட்டதட்ட) எல்லாரும் சொல்லி வர்றாங்க.

நன்றியோ/ நன்மையோங்கிறதே ஒருத்தவங்க அடுத்தவங்களுக்கு செஞ்சாத்தான் உண்டு. தனக்குத்தானே செஞ்சிக்கிறதப்பத்தி பேச என்ன இருக்கு, இல்லையா.

அப்ப எங்கயோ பொருள் இடிக்குது.
இதுதாங்க என் பல நாள் டவுட்.

உற்றவன்…… குறள் மாதிரி இதுக்கு எனக்கு பொருள் உணர முடியல.
போரத்துலயும் விட கிடைக்கல.

ஆனா, அதிர்ஷ்ட வசமா, விட புலவர் முத்துலிங்கம் பேட்டி (திரும்பிப் பார்க்கிறேன், ஜெயா டிவி) வழியா கிடச்சது.

நம்ம, இளையராஜாவுக்கும் இதே டவுட் இருந்திருக்கு.
(ஹ…ஹ…டவுட்டாலஜில இப்ப நம்ம ரேன்ஜ் தெரியிதுங்களா)

புலவர கேட்டதுக்கு, “எனக்கு தெரியலயே”ன்னு சொல்லிட்டாராம்.

அப்புறம், இளையராஜாவே சொன்ன விளக்கம் என்னாண்ணா,
” நன்றிங்கிறதே அடுத்தவங்க செய்யிறது தான்.
இந்த குறள்ல “மகற்கு”ங்கிறத மக்கள்னு பொருள் பாக்குறப்ப,
நாட்டு மக்கள்னு பொருள் கொள்ளாம வீட்டு மக்கள் (அதாவது பிள்ளைகள்)
அப்படீன்னு பொருள் கொள்ளனும்.

இப்படி பாத்தா,
எந்த வக நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் ம‌ன்னிப்பு / நல்வழி. ஆனால், தன்னை பெற்று, வளர்த்த பெற்றோர் தனக்கு செய்த நன்றியை / நன்மையை மறந்த பிள்ளைகளுக்கு மன்னிப்போ / நல்வழியோ கிடையாது.”
அப்படீன்னு விளக்குனாராம்.

இதப்பத்தி நம்ம மயிலை மன்னார் அய்யாவுக்கு என்ன படுதுன்னு திரு. VSK அவர்கள‌ முதல்ல கேட்டிருவோம்.

இல்லறவியல்ல இந்த குறள் வர்றனால இந்த interpretation, ஏத்துக்கொள்ளப்படக்கூடியது தான்னு எனக்கும் படுது.

உங்களுக்கு என்ன படுது.

(ஏண்டா படுத்துறன்னா….?)

(Picture courtesy: http://www.nallpro.com/tamil/att1/ilayaraja.jpg)

Advertisements

16 responses to “என் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…

 1. ஜெகதீஸ்வரன் 09:45 இல் ஜூன் 29, 2010

  ரொம்ப கொலப்புறீகளே!

  – ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com/

 2. குந்தவை 12:43 இல் ஜூன் 29, 2010

  வாழ்க உங்கள் ஆராய்ச்சி… வளர்க உங்கள் சந்தேகம்…. பெருகுக உங்கள் ‘கொல’ப்பங்கள்……..

  ஆனா விளக்கமும் நல்லா தான் இருக்கு.
  ஆமா.. அடுத்த செம்மொழி மாநாடுல பேசிக்காட்டுரேன்னு சபதம் கிபதம் பண்ணியிருக்கீங்களா தம்பி.

  • soundr 16:23 இல் ஜூன் 29, 2010

   ஏங்க, உண்மையிலேயே, நான் செம்மொழி மாநாட்டுக்கெல்லாம் போவேனுங்களா?
   அங்கெல்லாம் பேசுவேனுங்களா?

   அவ்வ்வ்வ்வ்…..

 3. sriramkrishnaswamy 16:38 இல் ஜூன் 29, 2010

  Hi, im new to wordpress….could you pls teach me how to change the small icon ( thmpnail ) appears on the right side of the comments … exaple Mr. Soundr has an image of man standing on the beach…pls help me….

  • soundr 18:59 இல் ஜூன் 29, 2010

   in the left hand controls of the main page in your a/c, select appearance, in the drop down box of that select widgets.
   in the widgets page, drag recent comments and place it in side bar 1. now open the drop down box of recent comments, you will see a drop down box for avatar size , which you can change.
   (i’m not an expert. hope this helps you)

 4. படைப்பாளி 19:53 இல் ஜூன் 29, 2010

  அருமை நண்பா.. நீங்க இந்த குரலுக்கு சொன்ன விளக்கத்துக்கு நான் நன்றி சொல்லலேனா எனக்கு மன்னிப்போ,நல்வழியோ கிடைக்காது ..போறப் போக்குல நீங்க தனியா குறள் எழுதிடுவீங்கப் போலிருக்கே..ஹ ஹா

 5. VSK 23:48 இல் ஜூன் 30, 2010

  மயிலை மன்னாரிடம் சென்று இதே கேள்வியை நானும் கேட்டேன்! அதற்கு அவன்,

  ‘போனவாட்டியே சொல்லிருக்கேன்….. ஒவ்வோரு கொறளாப் படிச்சாலும், மொத்தமா ஒரு கருத்துத்தான் ஐயன் சொல்லிருப்பாருன்னு. இதுல ‘மகற்கு’ன்னு வந்ததால, அது பெத்த புள்ளைங்களைச் சொல்லுதுன்னு எசைஞானி சொன்னாருன்னா, அது அவரு புரிஞ்சுக்கின அளவுக்குத்தான்னு வுட்டுரணும்! இப்ப ஆளாளுக்கு வெளக்கம் குடுக்கறாங்கன்னு போனவாட்டியே ஒன்னோட தோஸ்த்து சொன்னாரே…. அதும்மாரி! அப்பிடி ‘பெத்த புள்ளைங்களுக்கு’ மட்டுந்தான்னா, அதுல மத்த கொறள்லல்லாம் அதும்மாரி சொல்லிருக்காரான்னு பாக்கணும்! அப்பிடி இல்லாதப்ப, திடீர்னு ஒரே ஒரு கொறள்ல மட்டும் இப்பிடித் தனியாச் சொல்லுவாருன்னு நெனைக்கறதே சரியில்ல!

  இந்த 110-ஐ வுடு! அதுக்கும் முந்தி, 196-ஐப் படி! அது இன்னா சொல்லுது?

  பயனில்சொல் பாராட்டு வானைமகன் எனல்
  மக்கட் பதடி யெனல்….னு வருதில்ல? அதுல சொல்லிக்கீற மகன் ஆருன்னு பாரு!

  கொஞ்சங்கூட பிரயோசனமே இல்லாத ஒளர்றவனை மனுஷன்னே சொல்லாதே! அவன் நெல்லுக்குள்ள க்கீற பதரு மாரி ஒபயோகமத்தவன்னு சொல்லிக் காச்சறாரு ஐயன்!

  அதுல மகன்ற சொல்லுக்கு மனுஷன்னு அர்த்தம்! அதே அர்த்தந்தான் இங்கனயும்!

  மனுசங்க எந்தப் பாவம் செஞ்சாலும் அதுலேர்ந்து தப்பிச்சுக்கலாம்! ஆனாக்கண்டிக்கு, ஒர்த்தன்… அதாவுது, ஒரு மனுசன்…. செஞ்ச ஒதவியை மறந்தாங்கன்னா, அவங்களுக்கு வெமோசனமே கெடையாதுன்னு கட்டண்ட் ரைட்டா சொல்லிர்றாரு இங்க! இதுல போயி, பெத்த புள்ளைங்க, மத்த புள்ளைங்கன்னா பிரிச்சுச் சொல்லுவாரு? இது அல்லாருக்கும் பொது! அதுனால இதுல வர்ற ‘மகற்கு’க்கு, மனுசன்னுதான் அர்த்தம்! சரி, சரி, எடத்தக் காலி பண்ணு!’ எனச் சிரித்துக்கொண்டே என்னை விரட்டினான்!

  • soundr 12:22 இல் ஜூலை 1, 2010

   ரொம்ப நன்றி, திரு. VSK & மயிலை மன்னார் அவர்களே.

   அதிலயும் அந்த எடுத்துக்காட்டு,

   பயனில்சொல் பாராட்டு வானைமகன் எனல்
   மக்கட் பதடி யெனல்

   நல்லா புரிய வச்சது.

 6. VSK 00:45 இல் ஜூலை 2, 2010

  அது மட்டுமில்ல! பெத்தபுள்ளையைச் சொல்லணும்னு வர்றப்ப, கேக்கறவங்களுக்கு கொயப்பமே கூடாதுன்னும் சொல்லிருக்காரு நம்ம ஐயன்!

  “தந்தை மகற்காற்றும் நன்றி”, “மகன் தந்தைக்காற்றும் உதவி”ன்னு தனித்தனியாவும் சொல்லி, இதுல சொல்றது ஆரைப்பத்தின்னும் தெளிவாச் சொல்லிக்கீறாரு!

  எனவும் மயிலை மன்னார் சொல்லச் சொன்னான்!:)

  • soundr 10:43 இல் ஜூலை 2, 2010

   மிக்க நன்றி திரு VSK
   ( மன்னாரய்யா மையிண்ட்டுக்கு அந்த குறள் வரல்யேன்னு நெனச்சேன்.
   அதையும் சொல்லிட்டாப்புலயா. )

 7. pichaikaaran 12:36 இல் ஒக்ரோபர் 17, 2010

  ”அதுல மகன்ற சொல்லுக்கு மனுஷன்னு அர்த்தம்! அதே அர்த்தந்தான் இங்கனயும்!”
  அப்படீனு நினச்சு சிலர் குழ்ப்புவாங்கனு வள்ளுவருக்கு தெரிஞு இருக்கு.. அதனால்தான், சந்தேகமே இல்லாமல் , அது மகன், மகள், சிஷ்யன் ஆகியோர் தம் பெற்றோர்கள் , ஆசிரியர்கள்/ குரு ஆகியொருக்கு செலுத்தும் நன்றியைத்தான் இந்த குறள் சொல்கிறது என்பதை உணர்த்த, இன்னொரு நுணுக்கமான வார்த்தையை அதே குறளில் பயன்படுத்தி இருக்கிறார்..
  இன்னொரு முறை படித்து பாருங்கள்.. வார்த்தையில் விளையாடி இருப்பது தெரியும்..
  எனக்கு வந்த சந்தேகம் உங்களுக்கும் வந்த்தை அறிந்து மகிழ்ந்தேன்.. சேம் பிள்ட்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: