தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

திருக்குறள்,….தொடரும் சந்தேகங்கள்; (தமிழய்யாவின் சதியா…?)

(திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….? என்ற எனது இடுகையின் தொடர்ச்சி)

இந்த அடிப்பொடியானுக்கு திருக்குறள்ல வந்த சந்தேகத்துக்கெல்லாம் நீங்களும் உங்க நண்பர்களும் மெனக்கெட்டுதுக்கு நன்றிங்க.
ரொம்ப மெனக்கெட்ட திரு. VSK & மயிலை மன்னார் அவர்களுக்கும்
ரொம்ப ரொம்ப நன்றிங்க.

ஆனா எனக்குதான் குழப்பம் விட்டபாடில்ல. அதுனால தொடர்றேன்.
எனக்கு இப்ப திரு. VSK & மயிலை மன்னாரை (அட நீங்களும்தாங்க) விட்டா வேற கதி இல்லீங்க.

அதுனால இந்த குறள் சம்ம‌ந்தமா எனக்கிருக்குற எல்லா சந்தேகத்தையும் கேட்டுர்றேங்க.

1. “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து” குறள்ல கடைசியா வர்ற மருந்து,
practice of medicine, பொருள் படும்னா, அப்ப இந்த குறள்
practice of medicine க்கு introduction மாதிரி ஆகுது.
அந்த மாதிரி வர்றப்ப, மருந்துங்குற அதிகாரத்துல
இது தானே முதல் குறளா வரணும்னு ஒரு சந்தேகங்க‌.

இத விட்டுட்டு,
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”, ங்குறது முதலா இருக்கே.

2. மருந்து அப்படீங்கற அதிகாரத்துல தான இந்த குறளே வருது. அப்ப,
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே ” அப்படின்னு முடிச்சாலே பொருள் வெளங்கிடுமே.

இல்லன்னா, அப்பால்ங்குற வார்த்த இல்லாம ……
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
நாற்கூற்றே மருந்து”னு
சொன்னாலும், இதுவர பெரியவங்க சொல்ற பொருள் வந்திருதே…….

ஐயன் அவசியமில்லாம வார்த்தய உபயோகப்படுத்தமாட்டாருன்னு
எல்லோரும் நம்புறனால தான் இப்படி அனத்துறேங்க.

3. மருந்துங்குற அதிகாரத்துல வள்ளுவர் அய்யா, முடிஞ்சவரைக்கும்
ஔஷதத்த ஒதுக்கியே தான் வைக்கிறாருன்னு நினைக்கிறேன்.

ஔஷதத்த பத்தி உயர்வா ஒரு குறள் கூட இந்த அதிகாரத்துல இல்ல.

மேலும், “மருந்தென வேண்டாவாம்” அப்படீன்னு பொட்டுல அடிச்ச மாதிரிவேற சொல்லாடியிருக்காரு. அதுனாலயும் தான் எனக்கு குழப்பம் வந்ததுங்க.

இப்ப இந்த 3 பாயிண்டையும் படிச்சபொறவு,

“நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான், இவற்றையெல்லாம் கடந்து, மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்”.

அப்படீங்குற உரை ஏற்புடையதா, இல்லையான்னு சொல்லுங்க ?

தொடர்ந்து சங்கடம் கொடுக்குறதுக்கு மன்னிக்கணும்.

(“டேய், உன்ன யார்றா இப்படியெல்லாம் யோசிக்க சொல்றது”ன்னு டென்ஷனாவுரவங்க, என்ன உட்டுருங்க. கட்டுர முழுக்க “சீதை”ய “சிதை”ன்னு எழுதிவச்சாலும், கோபப்படாம, பொறுமையா எடுத்து சொல்லி, பரிவோட தமிழ் பாடம் எடுத்து, என்ன மாதிரி தத்தாரிங்கயெல்லாம் பாஸாகுற அளவுக்கு முன்னேத்திவிட்ட எங்க பள்ளிக்கூட தமிழய்யாட்ட‌ போய் நியாயம் கேளுங்க. )

12 responses to “திருக்குறள்,….தொடரும் சந்தேகங்கள்; (தமிழய்யாவின் சதியா…?)

 1. நான் தமிழன் 16:30 இல் ஜூன் 17, 2010

  //பொருமையா எடுத்து சொல்லி//

  அது பொறுமை அண்ணாத்த

 2. soundr 17:12 இல் ஜூன் 17, 2010

  //அது பொறுமை அண்ணாத்த//

  மிக்க நன்றி, மாத்திப்புட்டேங்க.

 3. VSK 17:46 இல் ஜூன் 17, 2010

  ‘இன்னா, ஒன்னோட தோஸ்த்துக்கு இன்னும் டவுட்டு தீரலியாக்கும்?’ என என்னை வரவேற்றான் மயிலை மன்னார்!

  ‘எப்பிடி கரெக்ட்டா கேட்டே மன்னார்?’ என்றேன் மன்னார்.

  இல்லியானா சொவத்துல அடிச்ச பந்துமாரி நீ இவ்ளோ சீக்கிரமா என்னியெல்லாம் பாக்க வரமாட்டியே! சரி, அத்த வுடு! மேட்டரைச் சொல்லு’ என்றான்.

  நண்பர் சௌந்தர் எழுப்பிய சந்தேக வினாக்களைப் படித்துக் காட்டினேன்.
  புருவத்தைச் சுருக்கிக்கொண்டு ஒரு வினாடி யோசித்தவன் சொல்லலானான்!

  ‘நான் ஒனக்கு முந்தியே சில விசயம்லாம் சொல்லிருக்கேன்! நம்ம ஐயன் மத்த பொலவங்கமாரி வெறும் எலக்கணத்துக்காவ மட்டும் எளுதுற பொலவரு இல்லை! அவரு ஒரு தெய்வப் பொலவரு. பெரிய சித்தரு! திருக்கொறளுக்குள்ள பல விசயங்களை மறைப்பா சொல்லி வைச்சிருக்காரு. சிதம் போக்கு சிவம் போக்குன்றமாரி, அவரு ஒரு அதிகாரத்த எடுத்துக்கினு, முன்னுரை, நடுவுரை, முடிவுரைன்னுல்லாம் வகையாச் சொல்ல மாட்டாரு. அந்த பத்தையும் ஒண்ணாவே படிக்கணும். சிலசமயத்துல ஒரே விசயத்த ஒரே அதிகாரத்துலியே ரெண்டு மூணு தபா சொல்லிருப்பாரு. ஏன்னா, அதான் அவரு அதுல முக்கியமா சொல்ற சமாச்சாரம்னு நமக்கெல்லாம் புரியணும்ன்றதுக்காவ! இத்த புரிஞ்சுக்கிட்டியானா, ஒனக்கு கொயப்பமே வாராது!

  சரி, இப்ப மேட்டருக்கு வருவோம். மொதல்ல இன்னா கேக்கறாரு ஒன்னோட ஃப்ரெண்டு?
  படித்துக் காட்டினென் நான்!

  //1. “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
  அப்பால் நாற்கூற்றே மருந்து” குறள்ல கடைசியா வர்ற மருந்து,
  ப்ரcடிcஎ ஒf மெடிcஇனெ, பொருள் படும்னா, அப்ப இந்த குறள்
  ப்ரcடிcஎ ஒf மெடிcஇனெ க்கு இன்ட்ரொடுcடிஒன் மாதிரி ஆகுது.
  அந்த மாதிரி வர்றப்ப, மருந்துங்குற அதிகாரத்துல
  இது தானே முதல் குறளா வரணும்னு ஒரு சந்தேகங்க‌.
  இத விட்டுட்டு,
  “மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
  வளிமுதலா எண்ணிய மூன்று”, ங்குறது முதலா இருக்கே.//

  மேலே நான் சொன்னதுலியே இதுக்கு பதிலு க்கீது! எத்த எங்க போடணும்னு நீ யோ நானோ முடிவு பண்ணக் கூடாது. அது எளுதவறரோட உரிமை. அதுனால, இது ஒரு பெரிய்ய மேட்டரே இல்ல!
  எதுனால எப்பிடி நோவெல்லாம் வருதுன்றத சொல்லிக்கினே வராரு. வாதம், பித்தம், கபம்னு மூணு ஒயுங்கா இல்லாமப் போனா நோவு வரும்னு மொதல்ல சொல்றாரு. அதெல்லாம் எதுனால வருதுன்றத அடுத்தாப்புல சொல்றாரு. எப்பிடி சாப்புடணும், எத்தச் சாப்புடணும்னு பட்டியல் போட்டுக் குடுக்கறாரு. இப்பிடியே ஒரு ஏளு கொறள் சொல்லிட்டு அப்பாலிக்காத்தான், டாக்டராண்டையே வராரு. இத்தப் படிச்சாலே புரிஞ்சிரும். நம்ம கையுலதான் செய்யவேண்டியது நெறைய க்கீதுன்னு! அத்தெல்லாம் சரிப்பட்டு வர்லேன்னாத்தான் அடுத்தவங்கிட்ட போவணும்னு தெளிவா சொல்லிடறாரு! அதுனால அவரு சொன்ன ஆர்டர் கரீட்டுத்தான்! வெளங்கிச்சா? அடுத்த்ப்புல இன்னா? என்றான்!

  //2. மருந்து அப்படீங்கற அதிகாரத்துல தான இந்த குறளே வருது. அப்ப,
  “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
  அப்பால் நாற்கூற்றே ” அப்படின்னு முடிச்சாலே பொருள் வெளங்கிடுமே.
  இல்லன்னா, அப்பால்ங்குற வார்த்த இல்லாம ……
  “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
  நாற்கூற்றே மருந்து”னு
  சொன்னாலும், இதுவர பெரியவங்க சொல்ற பொருள் வந்திருதே…….
  ஐயன் அவசியமில்லாம வார்த்தய உபயோகப்படுத்தமாட்டாருன்னு
  எல்லோரும் நம்புறனால தான் இப்படி அனத்துறேங்க.//
  எனப் படித்தேன்.

  சற்று சிரித்துக் கொண்டான் மன்னார்!
  ‘கேட்ட கேள்வி நல்லாத்தான் க்கீது! ஆனாக்காண்டிக்கு, போட்ட வார்த்தய சரியாப் புரிஞ்சுக்கலைன்னா இப்பிடித்தான் டவுட்டு வரும்! அவரே சொல்றாரு ‘வார்த்தய கச்சிதமாப் போடுவாரு ஐயன்னு! அப்பால, அவரே டவுட்டு கேக்கறாரு! தோ, இப்ப சொன்னேனே ‘அப்பால’, அதுக்கு இன்னா அர்த்தம்? பொறவுன்னு [பிறகு] புரியுதில்ல? அப்பிடிப் புரிஞ்சுகிட்டுத்தான் ஒங்க சவுந்தரு சவுண்டு வுடறாரு! ‘அப்பால்’ன்றத, இப்பிடிப் புரிஞ்சுக்காம, அப்… பால்..னு எடுத்துக்கணும். அதாக்காண்டிக்கு, அந்தப் பாலுன்னு! பாலுன்னா நீ குடிக்கற பாலு இல்ல! பாலுன்னா ஒரு துறை…கலைன்னு அர்த்தம். சொல்ல வந்தது மருந்து…மருத்துவம்ன்றதப் பத்தி. ‘நாற்கூற்றே மருந்துன்ற அப்பால்’னு புரிஞ்சுக்கினா, இந்த டவுட்டே வராது! சரியா? மேல படி’ என்றான்.

  //3. மருந்துங்குற அதிகாரத்துல வள்ளுவர் அய்யா, முடிஞ்சவரைக்கும்
  ஔஷதத்த ஒதுக்கியே தான் வைக்கிறாருன்னு நினைக்கிறேன்.
  ஔஷதத்த பத்தி உயர்வா ஒரு குறள் கூட இந்த அதிகாரத்துல இல்ல.
  மேலும், “மருந்தென வேண்டாவாம்” அப்படீன்னு பொட்டுல அடிச்ச மாதிரிவேற சொல்லாடியிருக்காரு. அதுனாலயும் தான் எனக்கு குழப்பம் வந்ததுங்க.
  இப்ப இந்த 3 பாயிண்டையும் படிச்சபொறவு,
  “நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான், இவற்றையெல்லாம் கடந்து, மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்”.
  அப்படீங்குற உரை ஏற்புடையதா, இல்லையான்னு சொல்லுங்க ?//

  ‘மருந்தென வேண்டாவாம்னு எப்போ சொல்றாரு? அவரு மொத ஏளுல சொல்லிக்கீற விசயத்த செஞ்சா, மருந்து ஒனக்கு வேணாம்னு சொல்றாரு. ஆனாக்க, அல்லாரும் அப்பிடி இல்லியே? ரொம்பப் பேரு கண்டதையும் தின்னுட்டுத்தானே அல்லல்படறாங்க? அதுனால மருந்து ஒண்ணு தேவைப்பட்டுத்தான் போவுது. அதுனாலத்தான் கடோசி மூணு கொறள்ல, வைத்தியம்ன்னா இன்னா? அத்த எப்பிடிச் செஞ்சா அது வேலை செய்யும்னும் சொல்லி வைச்சிருக்காரு. சீக்காளி, அத்த தீக்கப்போற டாக்டரு, அவரு கொடுக்கற மருந்து, அத்த மொறையா பாத்துக் கொடுக்க ஒரு ஆளு இந்த நாலு பேரும் இருந்தாத்தான், வைத்தியம்ன்ற கலை ஒளுங்கா நடக்குனு கடோசியா சொல்லி முடிக்கறாரு ஐயன்!

  எனக்கு தமிள்வாத்தியார் அளவுக்கு பொறுமை கெடையாதுப்பா? இருந்தாலும் இவ்ளோதான் சொல்ல முடியும்! இதுக்கும் மேல டவுட்டுன்னா நா இன்னா பண்ணச் சொல்றே?’ எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

  • soundr 11:55 இல் ஜூன் 18, 2010

   ஐயனின் வாக்கில் எனக்கேற்பட்ட குழப்பத்தை தீர்க்க,
   (“உன்னப்பாத்து ஒருத்தனும் கெட்டுப்போயிடக்கூடாது”, என்ற பொதுநலம் நடமாட),
   சிரமம் பாராது, மறுபடியும்
   மிக விரைவாக பின்னூட்டத்தில் விளக்கமளித்த
   திரு. ‌VSK & மயிலை மன்னார் அய்யா அவர்களுக்கும்
   அன்புகலந்த நன்றிகள், பல.

   //எனக்கு தமிள்வாத்தியார் அளவுக்கு பொறுமை கெடையாதுப்பா?//
   [(வள்ளுவர் அய்யா வார்த்தைக்குத்தான் எனக்கு பொருள் குழப்பமெல்லாம் வரும், மயிலை மன்னாராய்யா வார்த்தையோட பொருளையெல்லாம், கப்புன்னு புரிஞ்சிப்போமில்ல…‍:-).]

 4. veeraa1729 22:08 இல் ஜூன் 17, 2010

  திருவள்ளுவர் குறிப்பிட்டது நர்சையே என்பதற்கான விளக்கம் விரிவானது என்பதால் எனது வலைப்பூவில் பதிந்திருக்கிறேன். விளக்கத்தை காண்க
  வலைப்பூவின் சுட்டி
  http://cinthakulamblog.wordpress.com

  • soundr 12:03 இல் ஜூன் 18, 2010

   என் குழப்பத்திற்கு தீர்பதற்காக‌வும்,
   அனைவரின் பயனிற்காவும்,
   இதற்காக தனி இடுகையே இட்டு,
   அதை இவ்விடத்திலே வந்து
   தெரிவித்ததற்க்கும்
   திரு. வீரா அவர்களுக்கு
   அன்பு கலந்த நன்றிகள்.

 5. சுரேஷ் 12:36 இல் ஜூன் 18, 2010

  உள்ளார நாமளும் வரலாமா பா……?

  கொஞ்ச நாளாவே இந்தாண்ட வர ரொம்ப மெர்சலா கீது…….?

  • soundr 13:06 இல் ஜூன் 18, 2010

   தல, இந்த நக்கல் தான வேணான்றது……

   (உன்னிய மாதிரி,
   பள்ளிக்கூடத்துலேயே ஒழிங்கா பட்ச்சிருந்தா நா ஏன்
   இப்ப, இப்பிடி அல்லார் தாலியக்குறேன்.)

 6. குந்தவை 12:28 இல் ஜூன் 20, 2010

  சந்தேகமும் நல்லாயிருக்கு… விளக்கமும் நல்லாயிருக்கு.

 7. Mahesh 18:03 இல் ஜூலை 7, 2010

  I am always happy when i read something about thirukural.
  Since you are writing about thirukural, you might like this to add in your website.

  http://www.agrizlive.com/thirukural/index.php

  Here, You are asking questions and yourself answered to them 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: