தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

சாப்பாட்டு ஆர்வலரா நீங்க….? ரூபாய் ஆயிரத்துக்கு ஆசையா*

வாழ்த்துக்கள். நல்லா சாப்புடுற ஆளா நீங்க‌, சந்தோஷபட வேண்டிய விஷயம் தான்.
அந்த சாப்பாட்டு பத்திதான் இப்ப கேள்வியே.

அடுத்து வர பத்து கேள்வியில எத்தன கேள்விக்கு
கரெக்ட்டா பதில் சொல்றீங்கன்னு பாப்போம்.
இங்க‌ ஆண், பெண், வயசு பாகுபாடெல்லாம் இல்ல.
இந்த கேள்விங்களுக்கு சரியான பதிலா 10/10 வாங்குங்க,
ரூபாய் ஆயிரத்துக்கு ஆசப்படுங்க‌*.

1. அஸ்கா சக்கரை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

2. சேமியாவின் மூலப்பொருள் எது?

3. ஜவ்வரிசி மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
அ. கோதுமை
ஆ. மக்காசோளம்
இ. குச்சிக்கிழங்கு
ஈ. உருளைக்கிழங்கு

4. பருப்புவடை/மசால்வடை/ஆமவடை செய்ய தேவையான பருப்பு எது?
அ. கடலைபருப்பு
ஆ. உளுத்தம்பருப்பு
இ. பாசிப்பருப்பு
ஈ. துவரம்பருப்பு

5. பாசி பயறு/ பச்சைப்பயறுக்கும் பயத்தம் பருப்புக்கும் என்னா relation?

6. ஆழாக்கு படி என்றால் எத்தனை படி அளவு?

7. அப்பளம் செய்ய உபயோகப்படுத்தப்படும் மாவு,…………

8. ராகியின் தமிழ் பெயர் என்ன….?

9. கம்பு. இந்த தானியத்த ஆங்கிலத்துல என்னா சொல்றது?

10. ஆரஞ்சு பழத்த விட 5 மடங்கு அதிகமா vitamin C இருக்குறது எந்த‌ பழத்துல‌ ( நம்ம ஊர்ல பரவலா கிடைக்கிற‌து) ?

சரியான விடைகள்:
1. கரும்புச்சாறுதேய்ங்
2. கோதுமை
3. விடை: இ
4. விடை: அ
5. தோல் நீக்கப்பட்ட பயறு, பருப்பாகிறது.
6. 1/8 படி
7. உளுந்து
8. கேப்பை / கேழ்வரகு
9. Pearl millet
10. கொய்யால (அடிங்க, வார்த்தைக்கு முன்னடி “ங்” சேக்காத).

இப்ப 10/10 வாங்குனவங்கெல்லாம் கைய தூக்குங்க.
* உங்களுக்கெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் தலா ரூபாய் ஆயிரம் வேணுமா?
ஆச, தோச. “ஆசையா”, “ஆசப்படுங்க”ன்னு தான் சொன்னேன்.
கிடைக்கும், தர்றேன்னு சொல்லலையே.
ஹி…ஹி….ஹி….

Advertisements

2 responses to “சாப்பாட்டு ஆர்வலரா நீங்க….? ரூபாய் ஆயிரத்துக்கு ஆசையா*

  1. குந்தவை 12:35 இல் ஜூன் 20, 2010

    எப்படி இந்த பதிவை மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை.

    ‘ஆசைப்படுங்க’ என்பதை நான் முதல்லேயே கவனிச்சிட்டேன். 🙂

  2. soundr 23:16 இல் ஜூன் 20, 2010

    கவனிக்கிறதுல எல்லாம் , நீங்க கில்லாடி தான், ஒத்துக்குறோம்.
    ஆனா, எத்தன மார்க் வாங்குனீங்க சரியா சொல்லுங்க….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: