தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….?

அண்ணே, அண்ணே, எனக்கு வெகு நாளா ஒரு சந்தேகம்ணே…..

எதுலடா….?

திருக்குறள்லதேய்ங்…

பேஷ், பேஷ். அந்த ரேஞ்சுக்கு டெவலப் ஆகிட்டயாடா கண்ணா, நீ…!
OK. proceed. what is your doubt?

திருக்குறள் எண் 950, அதிகாரம் ‍ மருந்து, பால் பொருட்பால்….

டேய், Stop. நான் என்ன சென்ஸஸ் எடுக்க வந்த ஆளா?
கண்ட விவரம் எல்லாம் எனக்கெதுக்கு.
குறள சொல்லு, கேள்விய கேளு.‌

அண்ணே, அதுல வள்ளுவர் என்ன சொல்றார்ன்னா…
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து

இப்ப என்ன இதுக்கு உனக்கு உரை என்னான்னு தெரியணூமா?
kural.muthu.org, போ,
thirukkural.com போ, எல்லார் உரையும் அதுல இருக்கு.

அதில்லதாண்ணே சந்தேகம்.
இந்த குறளுக்கு
கலைஞர் உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
மு.வ உரை:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
English Explanation:
Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions (Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis )

இதுல பாத்தீங்கண்ணா, எல்லாருமே மருத்துவமுறை நாலு வகையாக அமைந்துள்ளதுன்னு சொல்றாங்க.
ஆனா, அந்த நாலாவது வகை கம்பௌன்டர்ன்னு ஒரு சாரரும், நர்ஸம்மான்னு ஒரு சாரரும் பொருள் வர்ற மாதிரி சொல்றாங்களே.
அந்த நாலாவது வக எதுண்ணே…?

அடேய், இப்பத்தான் விஞ்ஞானம் டெவலப்பாயிருச்சி.
அந்த காலத்துல ஏது கம்பௌன்டரு, ஏது நர்ஸம்மாங்க.
முன்னாடி காலத்துல வைத்தியர் கூடவே வர்றவரு மருந்த அரச்சி தருவாரு.
அவர கம்பௌன்டருன்னு சொன்னா அப்ப வீட்ல பக்கத்துல இருந்து கவனிச்சிக்குற ஆளையா நர்ஸுன்னு சொல்றது.
மருந்த வேளாவேளைக்கு சரியான அளவுல சரியான பதத்துல யார் நோயாளிக்கு கொடுக்குறாங்களோ அவங்க தான் அந்த நாலாவது வக.

என்னமோ சொல்றீங்கண்ணே, ஆனா எனக்கென்ன்மோ இந்த நாலு உரையுமே தப்புன்னு தோணுது.

ஏண்டா திருக்குறள்லயே தப்பு, ரைட்டுன்னு சொல்ற அளவுக்கு நீ வந்துட்டயா. சொல்றா என்ன தப்பு?

அண்ணே,
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து,
ங்குற குறள்ல இவங்க எல்லாரும் உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான்னு பிரிச்சி படிக்குறாங்க.
அப்பிடி படிச்சா அப்பால் நாற்கூற்றே ங்கிறதோட மேட்டர் முடிஞ்சிச்சு.
மருந்து ங்கிற வார்த்த எக்ஸ்டிரா ஆகுது.
அப்படியில்லாம உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று,
அப்பால் ‍ அதாவது அதற்கு அடுத்து, அதை கடந்து
நாற்கூற்றே மருந்து ‍‍‍‍‍ நாலாவது வகையே மருந்து.
நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான்
மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்.
இப்படியும் சொல்லலாம்ணே.

என்ன சொல்லலாம், கொல்லலாம். போடா வெட்டிப்பயலே,
அப்புடியே பஸ் ஏறி கோயமுத்தூர் போ.
ரொம்ப பேர் கூட்டம் கூட்டமா வந்திருப்பாங்க.
அங்க போய் சத்தம் போட்டு இத சொல்லு, நல்லா வெளங்க வப்பாங்க.

சரி சரி டென்ஷனாகாதீங்கண்ணே. ஒரு சிம்பிள் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
இந்த குறளுக்கு
போப் அய்யா உர மாதிரியேதான் பாப்பைய்யா அய்யா உர இருக்கு.
மு.வ ‌அய்யா உர மாதிரியேதான் கலைஞர் அய்யா உர இருக்கு.
பெருசா வித்தியாசம் இல்லயே. அப்புறம் ஏண்ணே இவங்களும் ….?

அண்ணே அண்ணே ஓடாதீங்கண்ணே,
பதில் சொல்லிட்டு போங்கண்ணே….
பதில் சொல்லிட்டு போங்கண்ணே…
……….

இந்த இடுக ரொம்ப மொக்கத்தனமா இருந்தாலும்,
இந்த குறளக்கு இப்படியும் பொருள் சொல்லலாமான்னு
உண்மையிலேயே ஒரு சந்தேகம் இருக்கு, எனக்கு.

தமிழ் ஆர்வலர்களும், தமிழ் பெரியவங்களும் கொஞ்சம்
இந்த அடிப்பொடியானுக்கு கருத்து சொன்னா நல்லாயிருக்கும்….

(Picture courtesy: http://www.indiaglitz.com)

Advertisements

6 responses to “திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….?

 1. குந்தவை 14:18 இல் ஜூன் 14, 2010

  //தமிழ் ஆர்வலர்களும், தமிழ் பெரியவங்களும் கொஞ்சம்
  இந்த அடிப்பொடியானுக்கு கருத்து சொன்னா நல்லாயிருக்கும்….

  அப்ப எனக்கு இங்க வேலை இல்லைன்னு நினைக்கிறேன்.

  இருந்தாலும் உங்க விளக்கம் நல்லாதான் இருக்கு.

 2. soundr 15:05 இல் ஜூன் 14, 2010

  இப்படியெல்லாம் எஸ்கேப் ஆகுறது நல்லால்ல, ஆமா.

 3. படைப்பாளி 17:46 இல் ஜூன் 14, 2010

  எப்படி நண்பா இப்படிலாம்..வேடிக்கையா நீங்க போட்டுருந்தாலும் வெவரமான மேட்டர் நண்பா..

 4. soundr 18:29 இல் ஜூன் 14, 2010

  உண்மையிலே டவுட்டுதானுங்க….

  இது வெவரமான மேட்டரா இல்லையாங்குறது
  தெரியிற அளவுக்கு கூட தமிழ் அறிவு எனக்கு இல்லீங்க.

  செம்மொழி லோகோவ பாத்து போட்டுகிட்ட சூடுங்க இது.

 5. VSK 01:06 இல் ஜூன் 17, 2010

  எனக்கென்னங்க தெரியும்? வழக்கம்போல, எனது நண்பன் மயிலை மன்னாரிடம் சென்று கேட்டேன். அதற்கு அவன் கொடுத்த பதிலை இங்கே தருகிறேன்.

  வெவரமான கேள்வியைத்தான் கேட்டுருக்காரு ஒன்னோட தோஸ்த்து! வெவரமா மட்டுமில்ல; வித்தியாசமாவும் நெனைச்சிருக்காரு. ஆனாக்காண்டிக்கும், அவரு சொல்றத அப்பிடியே ஒப்புத்துக்கற முடியாதுன்னுதான் தோணுது!

  எப்பிடீன்றியா?

  கொறள நல்லாப் பாரு இன்னொரு தபா!
  மருந்து, மருந்துன்னு ரெண்டுதரம் வருது!

  ஒரு வியாதிக்கு இன்னான்னா வோணும்?
  மொதல்ல அது போயி ஒர்த்தனைப் பிடிக்கணும்.
  அப்பால அவன் ஒரு டாக்டராண்டை போவணும்.
  அவன் ஒரு மருந்தைக் கலக்கிக் குடுப்பான், இல்லேன்னா எளுதிக் குடுப்பான்.
  அத்த ஒர்த்தன் கெவனமா வேளாவேளைக்கு இவனுக்குக் குடுக்கணும்… ஏன்னா, இவந்தான் சீக்காளியாச்சே! இவனால அத்த எடுத்துக் குடிக்கக்கூட முடியாமக்கூட இருக்கலாம்! அதுனால அதுக்குன்னு ஒர்த்தன் வோணும்.

  வெளங்கிச்சா?

  இந்த நாலும் சேர்ந்ததுதான் வைத்தியம்ன்ற கலை!

  இதான் இந்த கொறள்ல சொல்லிக்கீறது!

  மொதல்ல மூணாவதா சொன்ன மருந்து, நோயாளி எடுத்துக்க வேண்டியதப் பத்தி.
  கடோசியா வைச்சிருக்கற மருந்துன்ற வார்த்தை வைத்தியம்ன்ற கலையைப் பத்தி!

  இதுக்கு இன்னா ஆதாரம்ன்றியா?

  நீ அடிக்கடி போயிப் பாப்பியே அந்த அகராதியப் பாரு’ எனச் சொல்லி என்னை விரட்டிவிட்டான்! நானும் வந்து புரட்டினேன்!

  இதோ!

  maruthdhu மருந்து (p. 776) [ maruntu ] , s. (in comb. மருத்து) medicine, ஔஷதம்; 2. gun-powder; 3. philter, love-potion, வசிய மருந்து; 4. nectar, ambrosia, அமிர்தம்.

  , n. < மருந்து. 1. Practice of medicine; வைத்தியம்.

 6. soundr 15:25 இல் ஜூன் 17, 2010

  ரொம்ப நன்றி, திரு. VSK & மயிலை மன்னார் அவர்களே.
  மிச்சமிருக்கும் சந்தேகத்தை அடுத்த இடுக்கையா போட்டுட்டேன்.
  please help.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: