தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

வியர்வைப்பூ பூத்த மதியம்…..

விடுமுறை நாட்களை விட பள்ளி நாட்களின் மதியங்கள் ரசமானவை.

பள்ளி திண்ணையில் அடுக்கப்படும் சத்துணவின் வாசனை, ஜன்னல் வழி தெரிவிக்கும் மதிய இடைவேளைக்கு சில நிமிடங்களே என்று. உணவு இடைவேளையில் உணவுண்ணும் காலம் குறைவானதே. குறைவானது உணவுண்ணும் காலம், நிறைவானது உணவின் சுவை.

அபூர்வமாய் வரும் கறி சோற்றுடனோ, கோழி குழம்புடனோ தவறாது உடன் இருக்கும் சில “கரி”த்துண்டுகள்‍‍, வரும் வழியில் பேயோ, பிசாசோ உணவை திருடி தின்பதை தடுத்த அசதியில். தயிர் சோறா, பழைய சோறா யார் கண்டது வேற்றுமையை. ஆளுக்கு ஒரு கை.

தூக்குவாளியை கழுவுகிறேன், தட்டை கழுவுகிறேன் என்று பள்ளிக்கூட குழாயிலோ, அருகில் இருக்கும் கை பம்பிலோ, கிணற்றடியிலோ தண்ணீரில் ஆடிய ஆட்டத்தின் நினைவுகள் இன்றும் ஈரமானவை. “டேய், கொண்டாடா உனக்கு ஒழுங்காவே கழுவ தெரியாது. நான் தான் கழுவி தருவேன்”, என்று தட்டை வெடுக்கென்று பிடுங்கும் வசந்தியும், “டேய், ப்ளீஸ்டா. எனக்கான்டி தண்ணி அடிச்சிக்கொடுடா”, என புன்னகைத்து கெஞ்சும் ப்ரீயாவும் கடைசிவரை சொல்லாமலே விட்டுச்சென்ற உணர்வுகள் இன்று வரை சரியாக புரிந்து கொள்ளப்படாத ஏக்கங்களே. பெண் பிள்ளைகள் சீக்கிரமே மனமுதிர்ச்சி அடைகின்றனர் என்ற உண்மை அறியாமலேயே அந்த பருவம் கடந்து செல்கிறது. அவர்கள் பார்த்துக்கொண்டேயிருக்க “நா எறிபந்தாட போறேன். பொண்ணுங்கயெல்லாம் அதுக்கு சேத்தி யில்ல” என்ற வாக்கியமே இன்று வரை நினைவிற்கு வரும் முதல் ஆணாதிக்க வெளிப்பாடு. ‌

கிட்டிப்புல், கோலி போன்ற ஆட்டங்களும், வாத்தியார்களின் கழுகு கண்களுக்கு தப்பி அவ்வப்போது அரங்கேறும். இப்பமே ஒரு வீட்டுப்பாடத்த எழுதி முடிச்சா, போற வழியில இன்னும் ரொம்ப நேரம் ஆலஊஞ்சல் ஆடலாமே என்ற திட்டங்களும் ஒரு மனதாக நிறைவேறும்.

உணவு இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பமாகும் மணியடிக்க‌, வகுப்பின் உள் நுழைய ஆசிரியரோடு இடும் போட்டி பரம்பரைகள் கடந்தும் தொடரும் சம்பிரதாயம். அவசரமாய் இடம் தேடி அமர்ந்து புத்தகம் விரிக்கையில், ஜன்னல் வழி வரும் வேப்பமர தென்றல் காற்று, வேர்வைப்பூமாலை துடைத்து, ஆசுவாசப்படுத்தி, இதம் அளிக்கும்; சமயத்தில் இதம் தாண்டி தாலாட்டும்.

மதிய உணவு இடைவேளை நேரத்தை, அரிதாக, தவறவிட்டு தாமதமாக வந்து கை வலிக்க டப்பாவை தட்டிக்கொண்டிருக்கும் ஐஸ் வண்டிகாரனும், மதிய இன்டர்வெலிலாவது மிஞ்சியிருக்கும் வெம்பிய மாம்பிஞ்சுகளையும், காய்ந்த சீனிக்கிழங்கையும், பனங்கிழங்கையும் விற்று விட காத்திருக்கும் கிழவியும், எப்போதும் பீடி வாடை அடிக்க சற்று தள்ளி அமர்ந்திருக்கும் லக்கி பிரைஸ்காரனும், பல ஆண்டுகள் தினசரி பார்த்திருந்தும் சுயபரிச்சயமின்றி காரியக்கார உற‌வுகளாகவே தொடர்ந்தது,…….ஏன்?

இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது ஏதேனும் ஒரு கிராமத்து பள்ளியை க‌டந்துபோகையில் நியாபகத்திற்கு வரும் இவர்களின் நினைவில் பள்ளிக்குச் செல்லும் சிறார்களை இன்று காண்கையில் என்ன வரும் நியாபகத்திற்கு.

Advertisements

17 responses to “வியர்வைப்பூ பூத்த மதியம்…..

 1. kunthavai 11:54 இல் ஜூன் 8, 2010

  வாங்க தம்பி. ரெம்ப நாள் கழிச்சி எழுத வந்திருக்கீங்க.
  உங்க பள்ளிக்கூட நினைவுகள் நல்லாயிருக்கு. யாருக்குத்தான் மறக்கும்(பெருமூச்சுடன்) 🙂

  உங்க ஜூனியர் எப்படி இருக்கிறார்.அவருடைய புகைப்படத்தை அனுப்புங்க.(நாங்கள் பார்க்கலாம் என்றால்)

  • soundr 12:10 இல் ஜூன் 8, 2010

   நன்றி, குந்தவை; வருகைக்கும் விமர்சனத்திற்க்கும்.
   உங்களுக்கு மின்னல்ன்னு அடமொழி கொடுக்கலாமா…?
   என்னா ஸ்பீடு, பதிவ படிக்கிறதுலயும், பதில் போடுறதுலயும்….
   :-O

   ஜூனியர் போட்டோ என்கிட்டயே இல்லங்க…
   கழுத்து நிக்கிற வரைக்கும் போட்டோ எடுக்கவிடமாட்டேன்னு,
   துணைவியார் தடா போட்டுட்டாங்க….
   (ஆனா, அவன் தினமும் அவன் தாய்மாமாகூட skypeறான், என்ன நியாயமோ…?)

 2. சுரேஷ் 11:46 இல் ஜூன் 9, 2010

  இத இத இதத்தான் எதிர்பார்திட்டிருந்தோம் தல………

  படிக்க ஆரம்பிச்சிட்டேன் இதோ வந்துர்றேன் ???????

  • soundr 12:11 இல் ஜூன் 9, 2010

   என்னாது “தல”யா…?
   சுரேஷு இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல?

   ஏதோ பச்சப்புள்ளைக்கு நாலு பின்னூட்டம் போட்டமா,
   விட்டமான்னு இல்லாமா,
   தல, குடலுன்னு ஏத்திவிட்டுகிட்டு……
   தப்பிதவறி நான்பாட்டுக்கும் நம்பிட்டேன்னே….?

 3. சுரேஷ் 11:52 இல் ஜூன் 9, 2010

  “பள்ளி திண்ணையில் அடுக்கப்படும் சத்துணவின் வாசனை, ஜன்னல் வழி தெரிவிக்கும் மதிய இடைவேளைக்கு சில நிமிடங்களே என்று”

  குட் ஸ்டார்ட்ங்க……

 4. சுரேஷ் 11:57 இல் ஜூன் 9, 2010

  “பல ஆண்டுகள் தினசரி பார்த்திருந்தும் சுயபரிச்சயமின்றி காரியக்கார உற‌வுகளாகவே தொடர்ந்தது,…….ஏன்?”

  வாஸ்தவம்தான் தலைவரே…….

  ஆனாலும் அந்த ஐஸ் வண்டிக்காராரை மட்டும் இன்னும் நான் தவறவிடவில்லை…….

  அவ்வழி சென்றால் 5 ருபாய் சரக்கை 10 ரூபாய்க்கு வாங்குவேன்……

  எல்லாம் பழைய கணக்கு…….

  • soundr 12:28 இல் ஜூன் 9, 2010

   பாஸு. நீங்களும் ஐஸ்வண்டிகாரர்ட்ட கணக்கு வச்சவர்தானா….

   சில மாசம் முன்னாடி கார்ல்ல உக்காந்துகிட்டே கூப்பிட்டப்பா, ஐஸ்காரர் வர ரொம்ப தயங்குனாரு.
   அதிகப்படிய்யான‌ காச வற்புறுத்தி கொடுத்தப்ப, அந்த காச பையில போடுறதுக்கு முன்னாடி கையிலேயே வச்சிக்கிட்டு சில வினாடிகள் வெறிச்சிக்கிட்டேயிருந்தாரு.
   அந்த பார்வய சுலபமா மறக்கமுடியும்ன்னு தோணல….

 5. சுரேஷ் 12:07 இல் ஜூன் 9, 2010

  “ஏதேனும் ஒரு கிராமத்து பள்ளியை க‌டந்துபோகையில் நியாபகத்திற்கு வரும் இவர்களின் நினைவில் பள்ளிக்குச் செல்லும் சிறார்களை இன்று காண்கையில் என்ன வரும் நியாபகத்திற்கு. ”

  எங்கேயோ கொண்டு போயிட்டீங்க சார்…..

  யதார்த்தமான எளிமையான …….எனக்கும் கூட புரியும் படியா டச்சிங் ஆன எழுத்துல கரைச்சிட்டீங்க சார்.

  எனக்கு ரொம்ப ஆச்சரியமா படறது இப்பதிவின் நிகழ்வுகளில் உள்ள பொதுமை……fantastic…….

  adrenaline ஒ என்ன ine ஒ சொல்வாங்களே அதெல்லாம் அதிகமா இப்போ உடம்புல ஊருது சார்…..

  • soundr 12:32 இல் ஜூன் 9, 2010

   //இவர்களின் நினைவில்……. என்ன வரும் நியாபகத்திற்கு//

   இது ரொம்ப காலமா மனசுல தொக்கி நிக்குற கேள்விங்க.
   நண்பர்கள்ட்ட கேட்டப்ப மேலயும் கீழயும் பாத்தாங்க.
   அதான் இங்க சமர்பிச்சிட்டேன்.

 6. சுரேஷ் 12:15 இல் ஜூன் 9, 2010

  இதெல்லாம் கலக்கிட்டீங்க சார்

  முந்தைய reentry பதிவுல தான் கொஞ்சம் பயந்துட்டேன்…….

  பச்ச மண்ணு சார்………எனக்கு இதெல்லாம் தெரியாது புரியாது……

  பை தி வே நாங்களும் சுஜாதா சாரோட காற்றாலை தான்……

  வருகிறேன்.

 7. சுரேஷ் 12:33 இல் ஜூன் 9, 2010

  அடேயப்பா………உடனடி பதிலா………

  தேங்க்ஸ் சார்

 8. சு.மருதா 14:24 இல் ஜூன் 9, 2010

  கடைசிவரை சொல்லாமலே விட்டுச்சென்ற உணர்வுகள் இன்று வரை சரியாக புரிந்து கொள்ளப்படாத ஏக்கங்களே. பெண் பிள்ளைகள் சீக்கிரமே மனமுதிர்ச்சி அடைகின்றனர் என்ற உண்மை அறியாமலேயே அந்த பருவம் கடந்து செல்கிறது.
  அப்படித்தான் அப்படியேதான் நண்பரே! நமக்கு எல்லாம் புரிஞ்சு, நம்ம ஆள இனிமே laவ் பண்ணலாமுனு நினைக்கும்போது எவனோ கொத்திட்டு போயரங்க!!
  மீண்டும் மீண்டும் மலரட்டும் மலரும் நினைவுகள்

 9. படைப்பாளி 19:36 இல் ஜூன் 11, 2010

  அப்படியே என் பள்ளிபருவம் என் கண் முன்னால் வந்து சென்றது நண்பா…நினைவூட்டலுக்கு நன்றி..

  • soundr 20:46 இல் ஜூன் 11, 2010

   நன்றி படைப்பாளி.
   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

   காலையில் காணாமல் போன்… என்ற என்னுடைய மற்றொரு இடுகையும் உங்களை கவரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: