தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

Bachelor நான்‍‍‍‍‍‍வெஜ் சமையல் for girlfriends with tips…

Bachelor கூட்டதுல பாத்தீங்கன்னா, ரூம்ல சமைக்க தெரிஞ்சவன்
பண்ற அலப்பற‌ தாங்க முடியாதுங்க.
நெசத்த சொல்லணும்ன்னா சமைக்கிறதுங்கிறது ரொம்ப சிம்பிள்லான வேலைங்க.
பாத்திரம் கழுவுறதும், காய்கறி வெட்டுறதும் தான் இம்ச.
நல்லா கவனிச்சு பாருங்க; இந்த மாதிரி வேலைய சமைக்க தெரிஞ்ச
பயபுள்ளைங்க நைசா அடுத்தவன் தலைல்ல கட்டிருவாங்க.

சில அடிப்பட விசயத்த தெரிஞ்சிகிட்டா போதுங்க. அப்பால எல்லாமே
logical permutation combination தானுங்க.

நம்ம தனியா flat எடுத்து பசங்கள அண்டவிடாம வச்சிருந்தோம்ன்னா;
நல்லா கவனிச்சி பாருங்க அடிக்கடி எவளாவது ஒருத்தி சாயங்காலத்துல
வந்து cab கிடைக்கல‌, வண்டி punctureனு ஏதாவது மொக்க போடுவா.
அன்னைகின்னு சமைக்கிற அம்மாவும் வராது.

கண்ணா,
ஃப்ளாட் எடுத்து தனியா இருக்குறப்ப‌
பசங்கள உள்ள விட்டா
வீடு “பார்” ஆயிடும்;
பொண்ணுங்கள உள்ள விட்டா
ரூம் லாட்ஜ் ஆயிடும்.

இப்ப இந்த தேவதைங்கள‌ கூட்டிகிட்டு
ரெஸ்டாரன்ட் போனா, அங்க உயிர் நண்பன் எவனாவது
கழுகாட்டம் காத்துகிட்டு இருப்பான், பில்லு கொடுக்காம.

“I’m feeling very tired and hungry, junior”னு கரெக்ட்டா சரக்கு
இருக்குற ஃபிரிட்ஜத்தான் தொறப்பா.

பேசாம இவங்களுக்கு வீட்லயே வடிச்சி கொட்டுறது தான், cheap & best.

இந்த பதிவுல நான்‍‍‍‍‍‍வெஜ்… எடுத்தவுடனே நான்‍‍‍‍‍‍வெஜ்ஜா மலைக்காதீங்க.
இது தான் ரொம்ப சிம்பிள். ஆனா, பெயரமட்டும் முதல்ல சொல்ல கூடாது.

தேவையானவை:

ஆடு/மாடு/கோழி/கொக்கு/
வாத்து/முயல்/மான்/
பூனை/ நாய்/ பேய்/ பன்னி ‍ …
ஏதேவொண்ணு (but not seafoods) – 1/2 kilo
( நான் நக்கலுக்காக சொன்னேன், சில கறி ஆர்டர் பண்ணாலே, பொலிஸ் ஜீப் வந்துருமாம்ல‌?.)
(எல்லாத்துக்கும் ஒரே procedure தான்)

பெரிய வெங்காயம் ‍ 2…3
தக்காளி ‍ 2…3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 spoon
மல்லித்தூள் – 4—6
காரமான மிளகாய் தூள் – 2…3 spoon
கரம் மசாலா ‍ … 2 / 3 ரூ சின்ன பாக்கெட் ஓகே.
உப்பு
தேங்காய் பால் ….. (dabur hommade 1/2 packet, இல்லைன்னா ஒரு தேங்காவ புடிக்காத girl friendட்ட‌ கொடுத்து சில் எடுத்து, காஞ்ச தோல சீவிதள்ளிட்டு, சின்னசின்னதா நறுக்கி, கொஞ்சமா தண்ணிவிட்டு மிக்ஸில அரச்சி தர சொல்லுங்க‌ )
மல்லி தள‌
லெமன்.
(கறி அளவுல குறஞ்சது பாதி அளவு பெரிய வெங்காயம் ‍+ தக்காளி இருக்கணும். அப்பத்தான் கிரேவி நல்லா வரும். மிளகாய் தூளும் மல்லித்தூளும் 1:1 அல்லது 2:3 ரேஸியோவில் இருப்பது நலம்)

ok start:

அடுப்ப full flameல‌ பத்தவச்சி, ஒரு குக்கர தூக்கி வைங்க.
தோராயமா 30 மிலி oil விடுங்க. (ஒரு ஸ்மால் அளவு மச்சி).
வெட்டி வச்ச வெங்காயத்த போட்டு வதக்குங்க.
வெங்காயம் லைட்டா கலர் மாறுறப்ப,
இஞ்சி பூண்ட 2 spoon சேத்து ரெண்டு கிண்டு கிண்டுங்க. (வாசன வருதா…?)
வெட்டி வச்ச தக்காளிய போட்டு ரெண்டு கிண்டு கிண்டுங்க.

இப்ப காரத்துக்கு மிளகாய் தூள் 2 spoon போடுங்க‌
மணத்துக்கும், consistency க்கும் மல்லித்தூள் 3‍…4 spoon போடுங்க‌
அரை spoon மஞ்ச பொடி போடுங்க.
1 1/2 spoon உப்பு போடுங்க. அப்புறம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.
ரெண்டு கிண்டு கிண்டுங்க. flame பாதியா கொறச்சிக்கோங்க‌.
அப்படியே மல்லியோட பச்ச வாசன போறவரைக்கும் wait பண்ணுங்க.
just கொஞ்ச நேரத்துல‌ அங்கங்க எண்ணெ லேசா எட்டி பாக்குதா.
உங்க girl friendஅ கூப்டு இத காமிங்க. நாக்கு செத்துபோனவங்க‌
எல்லாருமே இத பார்த்தா wowனு மயங்குவாங்க.

stove flame- back to full mode.
இப்ப கழுவி வச்ச கறிய சேர்த்து, ரெண்டு கிண்டு கிண்டுங்க.
கறி மூழ்குற அளவு தண்ணி சேர்த்து, (ரூம்ல இருக்கிற சரக்க,
வைன் தவிர; சும்மா ஒரு சுமால் சேர்த்து பாருங்க, கறி சும்மா
பூவாட்டம் வேகும்) குக்கர மூடி, சிக்கன்னா 2 விசில்,
மட்டன்னா 5 விசில் அடிக்க விடுங்க.

இப்ப குக்கர தொறந்து, கறி வெந்துறிச்சான்னு பாருங்க.
இப்ப டேஸ்ட் பாத்து உப்பு, காரம் அட்ஜஸ்ட் பண்ணுங்க.
Preparation தண்ணியா இருந்தா சும்மா கொதிக்கவிடுங்க,
எல்லாம் ஆவியா போட்டும்.
காரம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கா, no problem.
கறி நல்லா வெந்த பிறகு, தேங்கா பால சேர்த்துக்கோங்க.

தேங்கா பால், உப்பு காரத்த குறைக்கும்.
தேங்கா பால் சேர்த்த பிறகு கறி வேகாது.
அதுனால தா கட்சிலோ add பண்றது.
உப்பு ஜாஸ்தியா போச்சா, அர உருளக்கிழங்க அப்படியே போடுங்க, அது எடுத்துரும் அர உப்ப.

எந்த consistency ல வேணுமோ அது வர்ற வரைக்கும் சும்மா கொதிக்கவிடுங்க.

இப்ப எல்லாம் ஓகேவா. அப்ப கரம் மசாலாவ சேர்த்துக்கோங்க.
மல்லி தளய போடுங்க, ஒண்ணும் வெட்டவேணாம்.
குக்கர லைட்டா மூடி, flame ம நல்லா கொறச்சிக்கோங்க‌.
2…3 நிமிஷம் கழிச்சி அடுப்ப off பண்ணீருங்க.

5 நிமிஷம் கழிச்சி ஓப்பன் பண்ணா, சம்மா செவசெவசெவன்னு
எண்ண மெதக்க ரெடியா இருக்கும்.

இப்பதான் முக்கியமான கட்டமே.
சாப்டு பாத்த பொண்ணு “wow, super”,னு சொன்னா,
“எங்க பரம்பரையிலேயே சமையல்ல”,ன்னு பிளேட் போடகூடாது.
“Beautiful guests always inspire a cook for delicious recipes” னு சொல்லி அடக்கமா புன்னகைக்கணும்.

“Fine, but little salty”னு பொண்ணு சொன்னா
“actually, i made it to be tasted with rice” இல்ல‌
“you have to add a dash of lemon juice before taking it. let me help you”னு நாசுக்கா மேக்கப் பண்ணனும்.

“mmmm, nice; little sour naa” னு பொண்ணு சொன்னா
“OCல சோறு தின்ன வந்திட்டு என்னடி sour”னு tension ஆக கூடாது.
“This is naughty spanish tomato flavor”னு கண்கள்ல புன்னகைக்கணும்.

“ஸ்…Its very hot and spicy for me”னு பொண்ணு சொன்னா
“This is spicy & double hot mexican/ethiopean/ indonesian flavor”னு தயங்காம அடிச்சிவிடணும்.
“I made this specially for you as Its a popular recipe in mexico for chill friday night get togethers like this….”னு பெரிய உலகஞானம் இருக்குறவனாட்டம் அடக்கமா பேசிக்கிட்டே அடுத்த மேட்டருக்கு போவணும்.

கடைசி பாயிண்ட்:
“ஆமா, இது பெரு என்ன‌”ன்னு பொண்ணு கேட்டா
“இது சிக்கன் சீக்கு கறி, மட்டன் மசிச்ச கறி”னு லோக்கலா பேசக்கூடாது.
அதுவுமில்லாம நம்மளே அள்ளி போட்டு பண்றோம்.

அதுனால,”you really like it. Well, This has been made specially for you, so let this delicacy have the honor of being christened with your lovely name as ………..chicken and the souls that taste this may ever be pleased and fulfilled with love, joy and fun “னு எதுனா தட்டி விடுங்க. (ஃப்ளாட்டுக்கு வந்த பொண்ணுங்ககிட்ட பிலிம் காட்ட‌ என் தயவ எதிர்பாக்குற ஆளா நீங்க….)

அதிமுக்கிய‌ பாயிண்ட்:
எல்லாம் முடிஞ்சி சாமானெல்லாம் கழுவி, கிளம்புறப்ப
“அடுத்த வாரம் நான் வரேன். ஆமா உன் கல்யாணத்த பத்தி என்ன பிளான் பண்ணிருக்க‌‌”னு பொண்ணு சொல்லிச்சு; அடுத்த தடவ அவளுக்கு சமைக்கிறப்ப பாவபுண்ணியம் பாக்காம ஒரு வண்டி உப்ப அள்ளி கொட்டுங்க.

நமக்கு சமைக்க தெரியிறது, நம்ம girl friendக்கு தெரியிறது
நமக்கு jackpot ஆகலாம்.
நமக்கு சமைக்க தெரியிறது, நம்மள‌ கல்யாணம் பண்ணிக்க
போற பொண்ணுக்கு தெரியிறது
வாழ் நாளுக்கும் நமக்கு நாமே வச்சிக்கிற ஆப்பாயிரும்.

Advertisements

14 responses to “Bachelor நான்‍‍‍‍‍‍வெஜ் சமையல் for girlfriends with tips…

  1. Aravind 08:26 இல் திசெம்பர் 14, 2009

    simpley superb..and ur oneliners are awesome..any experience in using them b4..:).just stumbled upon ur blog…

  2. Bhuvanesh 20:40 இல் திசெம்பர் 17, 2009

    //நல்லா கவனிச்சி பாருங்க அடிக்கடி எவளாவது ஒருத்தி சாயங்காலத்துல
    வந்து cab கிடைக்கல‌, வண்டி punctureனு ஏதாவது மொக்க போடுவாளுக.

    அண்ணே அப்புறம் உயிர் நண்பன் அவன் ஆள கூட்டிட்டு வரேன் னு சொல்லுவான்.. அப்படி யாருக்காவது அவங்க உயிர் நண்பன் சொன்னா இந்த டிஷ் செஞ்சு அ”சாத்துங்க” ..

    • soundr 11:04 இல் திசெம்பர் 18, 2009

      எங்க பாஸ்…
      உயிர் நண்பங்க எல்லாம்

      “ஒழுங்கா சமச்சிட்டல்ல,
      பிளாட் சாவிய கொடுத்துட்டு
      நீ வெளிய போ. அவ இப்ப வந்துருவா…”ன்னு

      ரொம்ப பிராங்கா….
      பேசுறாங்க…..

  3. அமுதா கிருஷ்ணா 21:41 இல் திசெம்பர் 17, 2009

    நல்லா இருக்கு, அவளுக,இவளுக தவிர்த்து இருக்கலாம்…..

    • soundr 10:55 இல் திசெம்பர் 18, 2009

      நன்றி, அமுதா கிருஷ்ணா.

      அவளுக,இவளுக என்ற பயன்பாடு
      offendingஆ இருந்திருந்தா
      பெண்கள் அனைவரிடமும்
      மன்னிப்பு கோருகிறேன்.

      முடிந்த வரை திருத்தி எழுதிவிட்டேன்.

  4. divyahari 19:55 இல் திசெம்பர் 21, 2009

    ungalai nanbanaga serppathu eppadi? ennai add pannikonga nanba..

  5. naren 20:40 இல் மார்ச் 5, 2010

    Dear Friend

    Nice presentation.. last line is superb..

    keep writing
    narayan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: