தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

வள்ளுவரும் …என் Bakery developmentம்…?

தமிழ்ல தட்டச்சு பழக ஆரம்பிச்சிட்டோம், சரி.
அப்படியே மகாபெரியவங்களயும் கண்டுக்கணும் இல்லயா.
யாருக்கு முதல்ல முறவாசல் பண்ணலாம்ன்னு
யோசிக்கிறப்பவே
வகையா சிக்குனாறு வள்ளுவரு.

“என்னா சார், இந்த பக்கம். எதுனா Ph.D பண்ணலாம்ன்னு
வந்தீங்களா”ன்னு நைசா பேச்சு கொடுத்தேன்.

“அதான், தமிழ் வோர்ல்ட் கான்ஃபரன்ஸ் நடத்த
போறீங்க இல்ல, அதுல ஏதாவது ஒரு Sessionல ‌
நான் Presentation கொடுக்கறதுக்கு சான்ஸ் கொடுப்பீங்களான்னு
கேட்டு போகலாம்ன்னு வந்தேன்”னுட்டாரு.

ஆஹா. பயங்கர குசும்புக்கார பாட்டனாரா இருக்காரே.
இவர carefulலாத்தான் handle பண்ணனும், போல.
ஆனா, நாமளே இப்ப தனியாத்தான் இருக்கோம்.
ரெண்டு நாளா பின்னூட்டமும் ஒண்ணும் கள கட்டல.
பேசாம இவருகிட்ட ஒரு ஆட்டோகிராஃப் வாங்குவோம்.
என்னதான் இருந்தாலும் பெரிய ம‌னுஷன்.
எதுனா உயர்வா எழுதிதான் sign பண்ணுவாரு.

அத வச்சிக்கிட்டு ஊருக்குள்ளார
” அவர்ட்ட‌ ஒரு ஹைகூ சொன்னேன்.
அப்படியே என் பதிவையும் காட்னேன்.
அத பாராட்டி போட்டதுதான் இந்த கையெழுத்து”ன்னு
கப்ஸா விட்டு நம்ம பேக்கரிய develop பண்ணீருவோம்.
அப்படியே அடுத்த வார குமுதத்திலயும், விகடன்லயும்
வந்திருச்சுன்னா, அதுக்கு அடுத்த வாரத்திலயே ஈசியா
தமன்னா, நயந்தாரா, த்ரிஷா, அசின் ன்னு contact develop ஆகிடும்.
அப்படியே அந்த புள்ளங்ககிட்டயெல்லாம் daily
களவியல்ல ஒண்ணு, கற்பியல்ல ஒண்ணுன்னு
உல்டா பண்ணி நம்ம ஹைகூன்னு பிட்ட போட்டு,
finalஆ சிக்குற புள்ளய அப்படியே நம்ம கூட
இல்லறவியலுக்கு இட்டுக்குனு வந்து settle ஆகிற வேண்டியது தான்னு
மனசுக்குள்ளாற plan போட்டு கேட்டா,

“நான் என்ன சினிமா ஸ்டாரா, ஸ்போர்ட் ஸ்டாரா.
Autograph போடற பழக்கம் எனக்கு கிடையாது”ன்னு escape ஆன மனுஷன்
படாருன்னு, “இப்ப என் கையெழுத்து, எதுக்கு உனக்கு?”ன்னு கேட்டேபோட்டாரு.

உண்மைய சொன்னா மட்டும்? அதான் கையெழுத்து கிடையாதுன்னுட்டயே
அப்புறம் என்ன கேள்வின்னு மனசுக்குள்றயே திட்டுனாலும்,
சரி வந்த வரைக்கும் லாபம்னு,”ஹி…ஹி…
எல்லாம் உங்க நியாபகார்த்தமா வச்சிக்கலாம்ன்னு தான் சார்.
மறுபடியும் பாக்கமுடியிதோ இல்லயோ.
பொய்யாமொழி புலவரோட எழுத்து ஒண்ணு எங்க‌கிட்ட இருந்தா
வாழ் நாளுக்கும் நல்லதுதானுங்களே”ன்னு
double meaning ல‌ நரித்தனமா சிரிச்சிக்கிட்டே கேட்டேன்.
இந்த வித்தையில நா “அமாவாசைக்கும்”, “பூ”வுக்கும் கோச்சாக்கும்.

“அடப்பாவி, இதுக்குத்தானா”ன்னு சொல்லி லைட்டா புன்னகைச்சது தாடி.

நெனச்ச மாதிரியே சிக்கிச்சு பெருசு. எப்படியும் அது use பண்ண‌
antique ஒண்ண கொடுக்கும். அஃக அது.

“கையெழுத்து எதுக்கு, உனக்கு நான் எழுதுனதுலயே ஒண்ணு தர்றேன்.
Pixar technologyல நானே develop பண்ணது, வச்சிக்கோ”ன்னு சொல்லி
ஒரு Blu-Ray Discக‌ கொடுத்துட்டு காலியா வந்த share auto ல ஏறி abscond ஆச்சு.

Very good. ஒரு செகண்ட கூட வேஸ்ட் பண்ண கூடாது.
எல்லா Daily reporter, Weekly reporter, News Channelக்கும் missed call விட்டாச்சு. வார்ட் கொளன்சிலர்ல இருந்து வாஹா பார்டர் செக்யுரிட்டி வரைக்கும் தகவல் சொல்லியாச்சு.
இந்தா, அந்த Discக பக்கத்து systemல போட்டுட்டு அப்படியே liveவா
உங்களுக்கும் update பண்றேன்….

இந்தா,
வருது….
வருது….
வருது….
………….
ம்,…..என்னாதிது…?????

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

(பி.கு: என்ன மாதிரி புரியாதவங்களுக்கு உரை:
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம்,
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும்
பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோல பயனற்றதாகி விடும்)

Advertisements

6 responses to “வள்ளுவரும் …என் Bakery developmentம்…?

  1. சுரேஷ் 14:19 இல் நவம்பர் 21, 2009

    உக்காந்து யோசிப்பாய்ங்களோ……..
    குட் ஐடியா சௌந்தர்……
    கெளப்புங்க

  2. --புவனேஷ்-- 12:55 இல் நவம்பர் 23, 2009

    வெறி தனம் பாஸ்.. வள்ளுவருக்கே குரல் (குறள் இல்ல குரல் தான்!) கொடுப்பீங்க போல !!

    • soundr 13:24 இல் நவம்பர் 23, 2009

      எங்கெங்க….புவனேஷ்,
      அதான் அந்த பெருசு;
      தமன்னா, நயந்தாரா, த்ரிஷா, அசின் ன்னு
      செட்டிலாக வேண்டிய என் பிளான்ன‌
      ஊத்தி மூடி இப்படி
      புலம்ப விட்டுருச்சே….

  3. வித்யாசாகர் 18:25 இல் ஜூன் 12, 2010

    வாழ்த்துக்கள். சுவாரஸ்யமான எழுத்து.. நடை. நிறைய எழுதுங்கள் சௌந்தர்!!

    வித்யாசாகர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: