தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், நியாயமா?

இப்படி ஒரு தலைப்ப பார்த்த‌ உடனே, என்னடா இவன் மொளச்சி மூணு இல வுடல,

அதுக்குள்ள இப்படி ஆயிட்டானேன்னு வருத்தப்படாதீங்க.
உங்க ஜூனியரான நான் ஏன் இந்த பதிவ போட்டேங்கிறதுக்கான‌ முக்கிய காரணம் கடைசியில.

சமீபத்தில என்ன பாதிச்ச சம்பவங்கள்ள‌ ஒண்ணு, பெருகி வரும் கருச்சிதைவு.
தினமும் எத்தனையோ பேர் கருகலைப்பு செய்றாங்க‌; அதன் தர்ம நியாங்கள் அவங்களோடது.
ஆனா கல்யாணமானப்புறம் ஒரு கருச்சிதைவுன்னா, பாகுபாடில்லாம‌ மனைவி, கணவன், அவங்க சொந்த பந்தம், friends ந்னு பலருக்கும் வருத்தம் தான். இந்த சிதைவினால அந்த பொண்ணு உடலாலும் ரொம்ப‌ பாதிப்புக்குள்ளாகிறா.

இப்ப பார்த்தீங்கன்னா கருச்சிதைவுக்கான‌ காரணங்கள் அனேகம். அதுல‌ பலது இன்னைக்கு நடைமுறை வாழ்க்கையில தவிர்க்க முடியாதது (pollution மாதிரி). இருந்தாலும் தவிர்க்க வேண்டிய 2 மட்டும் இங்கே.

மாறி வர்ற‌ கலாச்சாரத்தில கல்யாணம் கட்டிக்கிற சமயத்திலோ இல்ல கல்யாணம் ஆன பிறகோ அம்மணி; லிப் டு லிப் முத்தத்திலும், external affair யில் ஈடுபடாத உன்ன உன் friends, colleagues சிலர் “நாட்டுப்புறம்”ன்னு நக்கல் அடிச்சாலும் பரவாயில்ல. ஏன்னா

1. ஆணும் பெண்ணும் முத்தமிடறப்ப ஏற்படும் எச்சில் பரிவர்த்தனையில, ஆணின் எச்சிலோடு வருது ஒரு பிரத்யோக வஸ்து. இந்த வஸ்தாது என்ன பண்றான்? எந்த reaction நும் கொடுக்காம silent ஆ இருப்பான். இதுல முக்கியமான விசயம் என்னான்னா ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருப்பான், இந்த வஸ்தாது. முதல்ல இந்த வஸ்தாத மேலயும் கீழயும் பார்த்து முறைக்கிற பொண்ணேட உடம்பு, தொடர்ந்து வர்ற வஸ்தாதுங்க எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறப்ப “அட, இவனுங்க நம்ம உறவுக்காரங்க தான்”னு adjust பண்ணிக்கும்.
இப்ப, இதே ஆணால‌ அந்த பொண்ணு கருத்தரிச்சா, பிரச்சன இல்ல. அப்படி இல்லாம முத்ததுக்கு ஒருத்தன், முக்கிய வாழ்க்கைக்கு ஒருத்தன்னா பிரச்சனை தான்.

“சரி, அப்படி அந்த மாதிரி ரெண்டு வக வஸ்தாதுங்க இருந்தா என்ன ஆகும்?” அப்படிங்கறத‌ General knowledgeக்கோசரமாவது நம்ம எல்லோரும் அவசியம் தெரிஞ்சிக்கணும்.
“அப்படியாப்பட்ட சமயத்தில, உருவாகிற‌ கருவ பத்தி கேள்விப்பட்ட உடனே நம்ம வஸ்தாதுங்க, அடியாளுங்க‌ள‌ அனுப்பிச்சிடுவாங்க. இப்ப பெண்ணோட உடம்பு என்ன பண்ணும், இந்த அடியாளுங்ககிட்ட இருந்து கருவ‌ காப்பாத்த பாடுபடும். ஆனாலும் பாருங்க “நம்ம உறவுக்காரங்கன்”னு யாரு ஏற்கனவே recognize ஆகி இருக்காங்களோ அவங்க அடியாளுங்ககிட்ட இருந்து மட்டும் தான் கருவ‌ காப்பாத்த முடியும். “இந்த கருவுக்கும் எங்க ஆளுக்கும் சம்மந்தம் இல்ல”ன்னு கலாட்டா பண்ற அடியாளுங்ககிட்ட இருந்து கருவ காப்பாத்த முடியாம பாவம் பொண்ணேட உடம்பு “கதறி இரத்தமா அழும்”.

2. கிட்டதட்ட இதே மாதிரி பிரச்சனய்ய‌ விந்தணுவும் தட்டிவிடும். இதை ஆரம்பிக்க, Pre-eclampsia /Eclampsia பற்றி முதல்ல. இது ஒரு சாதாரண High BP யாக கர்ப்ப காலத்துல‌ஆரம்பிச்சி, சரியா கவனிக்கலைன்னா short spanல‌ ஆளையே தூக்கிரும். இதுக்கும் பல காரணம் இருக்கு. இந்த சமயத்துல மருந்து கொஞ்சம் dangerous.
சரி இத எப்படி தடுப்பது? Dieting, excercise இந்த‌ மாதிரி? ம்ஹும்.

இப்போதைக்கு better choice, எந்த விந்த‌ணுவால கரு உருவாகணுமோ அதே வகை விந்த‌ணுக்களே தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கிடைக்கணும். அப்பத்தான் இந்த பிரச்சனையை தடுக்க வாய்ப்புள்ளது. அதுனால தான் இந்த பிரச்சன பெரும்பாலும் முதல் பிரவசத்தில எழும். அதுக்காக முதல் பிரசவம் தான் முடிஞ்சிபோச்சேன்னு சேட்டய ஆரம்பிச்சா புதுசா வர்ற விந்த‌ணுக்களே இந்த பிரச்சனைய மறுபடியும் கிளப்பிவிட்டு அடுத்த கருவமட்டும் இல்லாம அந்த பொண்ணையும் சேர்த்து சமயங்களில் “கொன்று விடும்”.

இப்ப நீங்களே முடிவ சொல்லுங்க.
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், அப்படிங்கறது
நியாயமா ? அநியாயமா ?

We have lost one of our acquaintance’s wife during pregnancy due to Pre-eclampsia. Though she was modest to her husband, digging the details initiated the formation of this post. THIS POST IS DEDICATED TO THOSE GIRLS AND WOMEN WHO ARE VULNERABLE TO SOME CULTURAL CHANGES THAT COULD BE THEIR LIFE’S DISASTER. THIS POST IS FOR GENERAL AWARENESS AND NOT OF ANY MEDICAL VALUE. FOR BETTER INFORMATION PLEASE CONSULT WITH RESEARCHERS IN IMMUNOLOGY, SPECIALISING IN THE TOPICS OF SALIVA, SEMEN AND ABORTION.

நான் முற்போக்குவாதியோ, பிற்போக்குவாதியோ எனக்கே தெரியாது. ஆனால், இந்த awareness செய்தி எங்கோ, யாரோ ஒரு தோழியையோ அல்லது ஒரு தோழனின் குடும்பத்தையோ காப்பாற்றலாம் என்று நம்பும் ஒரு சாதாரண Junior.

20 responses to “ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், நியாயமா?

  1. abuanu 08:03 இல் நவம்பர் 25, 2009

    ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், அப்படிங்கறது
    நியாயம்

  2. ரோஸ்விக் 09:42 இல் நவம்பர் 26, 2009

    இவ்வளவு பெரிய விஷயத்தை சொன்ன நீ என்ன சின்ன புள்ளையா ராசா….நல்லாயிருக்குப்பா…நடத்து…நடத்து….

    ஆமா….”முளைச்சு மூணு இல்லை விடலை” அப்புடீன்னா என்னா ???

    • soundr 10:47 இல் நவம்பர் 26, 2009

      வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, ரோஸ்விக்.

      “முளைச்சு மூணு இல விடலை”னா,
      விதையில இருந்து முளச்சி மூணு இல
      விடற வரைக்கும் செடியால சுயமா உணவு
      தயாரிக்க முடியாது.
      In otherwords it means,
      “standing on my own legs கிடையாது.”

      இன்னொரு அர்த்தம் என்னான்னா,
      …. சீ…ச்சீ, ஒரு ஜுனியர்ட்ட கேக்குற‌
      கேள்வியா இது.

  3. ரோஸ்விக் 09:46 இல் நவம்பர் 26, 2009

    தமிழிஷ், தமிழ்மணம்….இங்கெல்லாம் உன் பதிவை இணைங்கப்பூ…

    http://www.tamilish.com
    tamilmanam.net

    அப்படியே ஒட்டுப்பட்டையும் போடுங்க…சந்தேகம் இருந்த எனக்கு மெயில் (thisaikaati@gmail.com) அனுப்புங்க…

  4. abuzuza 01:27 இல் திசெம்பர் 1, 2009

    Good information.
    Is it nature’s command for ‘one man, one woman’?
    What about remarriages due to death or divorce?

    • soundr 10:52 இல் திசெம்பர் 1, 2009

      thanks , abuzuza.
      for the visit and feedback.

      i, too guess the same.
      But the subclause in this natures restriction is, its all about the exposure level. as you have questioned, incase of remarriages initially there could be some immunological disturbances, but when the same type of semen and saliva enters again and again the girl, her body may slowly reprogram to accept this new type and clear off the earlier datas.

      Pls also keep in mind, that two biological subjects donot respond in the same way as machines. so we cannot say anything in a yes or no fashion.

ram -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி