தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

ஏன்….. இப்படி…. செய்தேன்

இதோ, நான் குதிச்சிட்டேன்.

சாதாரணமா தெரிஞ்சாலும்
குதிச்ச பிறகு தான் தெரியிது,
சங்கடமும், கஷ்டமும்.

ஐயோ மூழ்க போகிறேன்.

இப்படி ஒரு முடிவ என் வாழ்க்கையில நான் எடுத்திருக்கக் கூடாது.
அவசரப்பட்டுட்டேன்.
அடுத்தவங்கள சாதாரணமா நினைச்சிருக்கக்கூடாது.
இப்ப சிந்திச்சி என்ன பிரையோஜனம்?
இந்த பாவம் சும்மா விடுமா?

அட கடவுளே, மூழ்க ஆரம்பித்து விட்டேன்.

நாளைக்கு என் சொந்தங்களுக்கோ,
பந்தங்களுக்கோ,
நண்பர்களுக்கோ
தெரிஞ்சால் என்ன பேசுவார்கள்…?

யோசித்துக் கொண்டிருக்கையிலேயே….
………………………………………………..
…………மூ………………………………….
………………ழ்……………………………..
………………….கி………………………….
………………………………………………..
…………………………வி………………….
………………………………ட்……………..
………………………………………………..
…………………………………..டேன்…….
………………………………………………..
………………………………………………..

Good knight Maha Jumbo coil
with காக்க காக்க‌
introductory theme BGM

அது என்னமோ தெரியலங்க,
நமக்கு எப்பவுமே சொந்த புத்தியே கிடையாதுங்க.

அடுத்தவன் என்ன பண்றான்னு பார்க்கவேண்டியது.
சரி பார்த்தமான்னு மூடிட்டு இல்லாம
ஆயிரம் நொட்ட சொல்ல வேண்டியது.
இப்படி ஒருத்தன் பண்ணா,
நீங்களே சொல்லுங்க, சுயமா சிந்திச்சி
எழுதுறவங்களுக்கு எரிச்சல் வர்றது நியாயம் தான.

சும்மா சொல்லக்கூடாதுங்க, நான் பாடா படுத்துனவங்க நிறைய பேறு.
மட்டறுத்தல வழங்குறதுக்கு wordpresss
சந்தோசப்படுதோ இல்லையோ
யுகபாரதி உட்பட பலர் சந்தோசப்படுவர்.

சில சமயம், அவங்க இடுகையை விட என் பின்னூட்டம்
lengthதியா இருக்கும்.
ஆனா அதுக்கெல்லாம் அசராம
“கண்ணா நாங்கெல்லாம் ரியல் வோர்ல்ட்லயே பனங்காட்டு Fox.
இந்த பதிவு உலகத்தில நீயெல்லாம்,…. இந்தா”ன்னு
தட்டு நிறைய pedigree கொடுத்துவங்களும்
kgjawarlal, uumm மாதிரி பலர்.

அதுக்காக சும்மா விட்ற முடியுமா?

மற தமிழனே,
மாசற்ற மாணிக்கமே,
மங்காத குலவிளக்கே,

கம்மாளர் கை
பொன்னே,
பொன்மணியே,
பொற்சரமே
பொங்கி வரும் புதுவெள்ளமே ன்னு

சின்ன புள்ளயில இருந்து
வீட்டில கேட்டு கேட்டு வளர்ந்தது
(பக்கத்து வீட்டு பாட்டி; அவ பேர புள்ளய கொஞ்சுற‌த‌)
வீண் ஆகுமா ?

அதுதான்,
உக்காந்து யோசிச்சேன்.
நீட்டா பிளான் போட்டேன்.
டேட்டா கேதர் பண்ணேன்.
அசெம்பிள் பண்ணேன்.
பல ஆங்கிள்ல அனலைஸ் பண்ணேன்.
ரிசல்ட்ட
பல தடவ
பல மெதட்ல
இன்டெர்பெர்ட் பண்ணி
எல்லா ஸ்டெப்சையும்
வேலிடேட் பண்ணாலும்
ஒரே கன்குளுஷன் தான் கிடைத்து.

அது

“குதிச்சிற்ரா கைப்புள்ள”

28 responses to “ஏன்….. இப்படி…. செய்தேன்

  1. Jawahar 14:19 இல் நவம்பர் 16, 2009

    நல்ல ஆரம்பம், கலக்குங்க. உங்க பின்னூட்டங்கள்லேர்ந்து நீங்க கொஞ்சம் சராசரிக்கு அதிகமான ஆள்ங்கிறது புரிஞ்சது. எழுத ஆரம்பிச்சிருக்கிற ஸ்டைலைப் பார்த்தா இன்னும் அதிக உயரங்களை எட்டுவீங்க போலத் தெரியுது.

    வாழ்த்துக்கள்.

    http://kgjawarlal.wordpress.com

    • soundr 14:35 இல் நவம்பர் 16, 2009

      ரொம்ப நன்றி
      ஜவஹர் சார்.

      விசயத்த தெரிவிச்ச உடனே
      மின்னலா
      இந்த எளியவன்
      பக்கத்துக்கும் வந்து
      வாழ்த்து தெரிவிக்கிறீங்களே…
      இது தான்
      Great men stoop down to uplift mankind ஆ?

  2. b.rajaram 16:41 இல் நவம்பர் 16, 2009

    diferent aproach!

    சும்மா,கலக்கல் மொழி.நீங்க ஜெயிக்காட்டி யார் ஜெயிக்கிறது பாசு!இனி,நீங்கதான் நம்மளையும் சேர்த்து பார்க்கணும்.ஆத்துல போற தண்ணி.அள்ளி குடி மச்சி…

    வாழ்த்துக்கள் சௌந்தர்!

    • soundr 17:23 இல் நவம்பர் 16, 2009

      உண்மையை சொல்லப்போனா
      “இவர் போன்ற‌ மேன்மக்களையெல்லாம்
      உன் இடுகைக்கு அழைக்க உனக்கு என்ன‌
      யோக்யதை இருக்குன்னு”
      உள் நெஞ்சில் அலறல் தெறிக்க,
      வெட்கம் பிடிங்கி திங்க,
      தயங்கி தயங்கித்தான்
      அழைத்தேன்.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி பா.ரா

  3. Bhuvanesh 16:47 இல் நவம்பர் 16, 2009

    வெறித்தனம்.. அதுவும் அந்த கவிதை பத்தி பேச வார்த்தையே இல்லை!!

    • soundr 17:30 இல் நவம்பர் 16, 2009

      தலைவரே
      எதுவா இருந்தாலும் ஓப்பனா
      சொல்லிருங்க.
      நல்லாயிருக்கா இல்லையான்னு.

      இப்படி பொதுவா சொன்னா எப்படி?

      அதுவும் அந்த கவித
      இன்னும் நாலு para
      இருந்தது. பயத்துல‌
      delete செஞ்சிட்டேன்

  4. குந்தவை 17:00 இல் நவம்பர் 16, 2009

    அம்மாடியோவ் இந்த போடு போடுறீங்க.
    கலக்குங்க பாஸ்.

  5. இராஜராஜன் 17:03 இல் நவம்பர் 16, 2009

    வணக்கம் லொடுக்கு

    தங்கள் பின்னூட்டம் பார்த்தேன், வந்தேன் உங்கள் வலைப்பக்கம்.

    உங்களின் எழுத்து நடை நல்லா இருக்கு பொதுவா படிக்கவைக்கும்.
    நீங்க என்னதான் பனங்காட்டு fox -ஆ இருந்தாலும் மூழ்கிவிட்டால் கடப்பார நீச்சல் தவிர மத்த எல்லா நீச்சலும் அடிக்க இந்த வலையுலகமே கத்துதரும்.

    நல்ல தொடக்கம் வாருங்கள், தொடருவோம்

    இராஜராஜன்

  6. Jawahar 18:07 இல் நவம்பர் 16, 2009

    சௌந்தர், நம்ம கைராசி நல்லா இருக்கு போலிருக்கே! வண்டி புறப்பட்டதுமே ஸ்பீட் புடிக்குது!

    http://kgjawarlal.wordpress.com

  7. kggouthaman 19:02 இல் நவம்பர் 16, 2009

    ஆர்வம் நல்லதுதான். அது நிறைய இருப்பது தெரிகிறது. அது குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; அதே நேரத்தில், நகைச்சுவைக்காக நீங்க எழுதியிருந்தாலும் – அதிகமாக நெகடிவ் அப்ரோச் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் – எழுத்தில். நெகடிவாக ஆரம்பிச்சு, பாசிடிவா முடிச்சிருக்கீங்க. முழுவதுமே – பாசிடிவா இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. (நான் ஒன்றும் மகா மகா கிடையாது!)

  8. soundr 19:06 இல் நவம்பர் 16, 2009

    அடிக்கடி
    கொஞ்சம் என்னை பட்டை தீட்டி விடுங்கள் kgg.
    நன்றி.

  9. ஸ்ரீராம் 19:50 இல் நவம்பர் 16, 2009

    “ஏன் இப்படி செய்தேன்…”

    விடுங்க, நல்ல முடிவுதான்…மற்றவர்களுக்குப் பின்னூட்டம் போட்ட இடத்தில் நமக்கு வர்ற பின்னூட்டம் த்ரில்தான் Ready…Start…Go!

  10. Deepa 13:19 இல் நவம்பர் 17, 2009

    Nalla Thodakkam 🙂

    In my opinion, any one who likes to read and give opinions should also attempt to write… Nalla Ezhudhareenga… Ungal ezhuthil swarasiyam irukiradhu.. Neengal ezhudhum vidham nalla pesu thamizh nadaiyaaga ulladhu…

    Senior nu sollitteenga.. Appo karuthu solla vendiyadhu urimai enbadhai vida, kadamai.. so oru karuthu 🙂 Always make sure you write what you want to and also make sure that what you write is clean in terms of subject and clear in terms of understanding… 🙂

    Ennai portha varai, en ezhuthukkalil politics irukkadhu…. Adhu pola oru principle vechu ezhudhalam 🙂 Mathapadi.. indha space ongalodadhu, ongallukkkaga andri yaarukkagavum karuthukkalil maatra seiyaa vendiya avasiyam illai 🙂

    Happy blogging..

    Tamil pinnooottam anupa theriyavillai… theda tharpodhu neram kuraivu.. adhan english / tamil matri maatri ezhudhiyullen.

  11. marudha 14:38 இல் நவம்பர் 17, 2009

    வணக்கம் தோழரே
    நானும் உங்களை போல் தான்.
    கலக்குவோம்.

  12. சுரேஷ் 11:47 இல் நவம்பர் 18, 2009

    நல்லா எழுதறீங்க நண்பா…..
    கலக்குங்க…
    அப்புறம்
    “யோசித்துக் கொண்டிருக்கையிலேயே….
    ………………………………………………..
    …………மூ………………………………….
    ………………ழ்……………………………..
    ………………….கி………………………….
    ………………………………………………..
    …………………………வி………………….
    ………………………………ட்……………..
    ………………………………………………..
    …………………………………..டேன்…….
    ………………………………………………..
    ………………………………………………..”
    இது சுஜாதா கிட்ட சுட்டது தானே.
    bhuvanesh blog மாதிரியே youthfull”a இருக்கு.
    கலக்குங்க. வாழ்த்துக்கள்..

    • soundr 12:36 இல் நவம்பர் 18, 2009

      ரொம்ப நன்றி சுரேஷ்.
      அடடா சந்தடி சாக்குல நம்பள சுஜாதா கூட link
      பண்ணிட்டீங்களே.
      ஹி…ஹி…. obviously,
      இருந்தாலும்
      //சுஜாதா கிட்ட சுட்டது// ங்கிறத விட‌
      சுஜாதாவோட influence ன்னு
      சொல்லிருங்களேன்.
      ஆனா, bhuvanesh blog மாதிரியேங்கிறது தான்
      பயமா இருக்கு. புவனேஷ்யோட அந்த‌
      “ஒரு வயசு பொண்ண” எத்தன தடவ படிச்சாலும் மலைப்பா தான் இருக்கு…

  13. raj 20:04 இல் நவம்பர் 18, 2009

    Hi

    All the best for your new blog.

    Hmmmmmmmmmmmmmmm solla vaaa….vendamaaa……..
    ………………………
    …………………………….
    ………………………………….

    I am straining too much to read your blog…you may or can change the templet…if you see…your blog occupies only 35 of screen….left side 4inch grey border followed by 2.5inch black then 5inch of blog and 3.5inch of another grey boder.

    Think light color background will improve the appearance of the blog…..like http://kgjawarlal.wordpress.com/….http://jackiesekar.blogspot.com/http://www.boochandi.com/

    tooooooooooo much choooo?….sorry

raj -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி