தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

வாங்க…..வாங்க….

வணக்கம்.

நான் ஏன் blog ஆரம்பிச்சேன்னா…
இதுக்கு முன்னாடி blog   ஆரம்பிச்சவங்க‌ எல்லாம் என்ன பண்ணாங்க ?
என்ன பண்ணாங்க ?

கத சொன்னாங்களா,
புத்தி சொன்னாங்களா,
சமையல் சொல்லி தந்தாங்களா,
அனுபவத்த சொன்னாங்களா,
Joke சொன்னாங்களா,
புது விஷ‌யம் சொன்னாங்களா,
உண்மைய சொன்னாங்களா,
நாட்ட திருத்துனாங்களா,….

“டேய், நிறுத்து. இந்த ஈரவெங்காயம் எல்லாம் எதுக்கு இப்ப? நீ என்ன செய்யப்போற அத பத்தி மட்டும் பேசு”, அப்படின்னு நீங்க டென்ஷன் ஆகுறது எனக்கு புரியுது.
ஆனா பாருங்க, இப்படி நான் இழுவ போடும் போதே,
“என்ன செய்யப்போறான்னு தெரியாமலே வந்திட்டான்”னு உங்களுக்கு புரிஞ்ச்சிருக்க வேண்டாமா?

நான் கண்டிப்பா
serious matter   எதுவும் எழுத மாட்டேன்.
serious matter   எதுவும் எழுத மாட்டேன்.
serious matter   எதுவும் எழுத மாட்டேன்.

அப்படி ஏதாவது இருந்தா அது கண்டிப்பா நான் எழுதியதா இருக்காது.

என் நோக்கம் ஒண்ணே ஒண்ணு தான்.

தமிழ்ல தட்டச்சு பழகுறது தான்.
தமிழ்ல தட்டச்சு பழகுறது தான்.
தமிழ்ல தட்டச்சு பழகுறது தான்.

19 responses to “வாங்க…..வாங்க….

 1. KVR 15:49 இல் நவம்பர் 16, 2009

  //நான் கண்டிப்பா
  serious matter எதுவும் எழுத மாட்டேன்.
  serious matter எதுவும் எழுத மாட்டேன்.
  serious matter எதுவும் எழுத மாட்டேன்//

  அப்போ சீக்கிரமே பிரபல பதிவர் ஆகிடுவிங்க, இப்போவே வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்.

  • soundr 16:47 இல் நவம்பர் 16, 2009

   இப்படி பொசுக்குன்னு
   சாதாரணமா வந்து,
   பந்தா எதுவும் இல்லாம‌
   வாழ்த்திட்டு போறீங்களே….

   மிக்க நன்றி KVR.

 2. Bhuvanesh 16:35 இல் நவம்பர் 16, 2009

  வாங்க ராசா.. கலக்குங்க.. நல்ல நடை!

  • soundr 16:58 இல் நவம்பர் 16, 2009

   நல்ல நடைன்னு
   நீங்க பதிஞ்சது ரொம்ப சந்தோசமா இருக்கு.
   உங்க “ஒரு வயசு பொண்ணு” பதிவ பார்த்து,
   இப்படி க்ரியேட்டிவிட்டி இருக்கிற ஆளுங்களுக்கு
   மத்தியில டீ ஆத்த முடியுமான்னு பல வாரமா
   தயங்கிட்டே இருந்தேன்.
   மிக்க நன்றி Bhuvanesh.

 3. குந்தவை 16:56 இல் நவம்பர் 16, 2009

  //என் நோக்கம் ஒண்ணே ஒண்ணு தான்.

  தமிழ்ல தட்டச்சு பழகுறது தான்.
  தமிழ்ல தட்டச்சு பழகுறது தான்.
  தமிழ்ல தட்டச்சு பழகுறது தான்.

  ஹா…ஹ…. இதெல்லாம் இப்படி வெளிப்படையா சொல்லலாமா .

  • soundr 17:08 இல் நவம்பர் 16, 2009

   உண்மைய சொல்லாம?

   இங்க இருக்கிற உங்கள மாதிரி ஜாம்பவான்களே
   சாதிச்சிட்டு அடக்கமா இருக்கிற‌ப்ப‌
   நான் என்னங்க, குந்தவை;
   பிஸ்கோத்து பய.

   ஒவரா வாய் சவடால் விடாம
   வேலய பார்த்தா தானங்க, என்
   bakerya develop பண்ணமுடியும்.

 4. kggouthaman 18:24 இல் நவம்பர் 16, 2009

  வித்தியாசமா யோசிச்சு, துணிச்சலா எழுதுங்க – வெற்றி நிச்சயம்.

 5. pudugaithendral 08:05 இல் நவம்பர் 17, 2009

  வாங்க வந்து ஜோதில கலந்துக்கோங்க.

  வாழ்த்துக்கள்

 6. ஊடகன் 10:34 இல் நவம்பர் 17, 2009

  வாழ்த்துக்கள்…………..

 7. padmahari 15:25 இல் நவம்பர் 18, 2009

  வாழ்த்துக்கள் சௌந்தர்……உங்க எழுத்து நடை சுவாரசியமா இருக்கு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: