Examined
- 14,396 times
அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண
யூனிவர்சிட்டியில சேரும் போதே ஒரு முடிவோட இருந்தேன். ராகிங்ல என்ன கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டாலும் அத தவறாது நிறைவேற்றிவிடுவதுன்னு.
“பாட்டு பாடு”
“டான்ஸ் ஆடு”
“இவன அடி”
“தோப்புக்கரணம் போடு”
“தரையில படுத்து நீச்சல் அடி”
“தீக்குச்சிய வச்சி அளந்து காட்டு”
“இந்தா, தம் அடி”
“சரக்கு அடி”
இப்டி எல்லாமே, சின்னபுள்ளத்தனமா தான் இருந்திச்சு. ஏற்கனவே வடிவேலு மாதிரி மையிண்ட் செட் ஏற்படுத்திக்கிட்டனால, என்ன சொன்னாலும் செஞ்சேன், எவ்வளவு அடிச்சாலும், வாங்கிகிட்டு ஈஈஈஈஈன்னு பல்ல காட்னேன்.
ஏண்டா உனக்கு சொரணயே இல்லையான்னு, கேக்காதீங்க….
இப்படி ஒரு ஜூனியர்வாச்சா, எப்பிடி இருக்கும் சீனியர்க்கு; ஒரே வாரத்துல, “சீ, உன்ன யார்ரா ராகிங் பண்ணுவா”ன்னு காரி துப்பிட்டு மத்தவனுங்கள மேயிக்க போயிட்டானுங்க.
அப்பாடா எல்லாரையும் சமாளிச்சாச்சுன்னு சந்தோசம சுத்துனேன்.
கிட்டதட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் முக்கியமான 3 பேர்கிட்ட மாட்னேன்.
இவனுங்க கிட்ட மாட்டுனதுக்கு தினைக்கும் மூணுவேள அடி வாங்கலாம்.
மொத ஆளு:
இந்த சீனியர் அடிக்கவோ, திட்டவோ மாட்டான். ஆளு பொன்னம்பலத்துக்கு பங்காளி மாதிரி இருப்பான். லேசா தொண்டய செருமுனா போதும், டர் ஆயிரும்.
சனிக்கிழம, ஞாயித்திகிழம இவன் ரூமுக்கு இழுத்திட்டு போயி ஒரு முலையில நிறுத்தீருவான். அவ்ளோ தான்.
அவன் பாட்டுக்கும் அவன் வேலய பாத்துகிட்டிருப்பான் (பயபுள்ள பாடபுஸ்தகத்த படிப்பாங்க, கோவில் குருக்களாட்டம், முணுமுணுன்னு). ரூம்ல, பாட்டு பாடாது, போஸ்டர் கூட இருக்காது. அந்த ரூமுக்கு வர்றவனுகளும் நம்மள கண்டுக்க மாட்டாங்க (அப்புறம் நம்ம எதுக்கு அங்கனகுள்ள). ராத்திரி 11 மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான்.
அவ்ளோ நேரமும் சும்மா நின்னுகிட்டே இருக்கணும், பேசக்கூட தடா. (ஈஸியா தெரியிதா, ஒரு நா நின்னுபாத்து, சொல்லுங்க). ஆனா, மதியம் சாப்புட நல்லா வாங்கி தருவான்; பிரியாணி, நான்வெஜ்ன்னு (பெரிய, வள்ளலாட்டம்). அதுக்கப்புறமும் நிக்கணும், எப்டி முடியும். கண்ணு சொருகும், தூக்கம் அழுத்தும். அந்நேரம் பாத்து பாசமா ஒரு ஸ்மைல் பண்ணுவான் பாருங்க……. “டேய், ரெண்டு அடியாவது அடிச்சிட்டு விட்றா”னு மனசு கெஞ்சும்.
ரெண்டாவது ஆளூ:
இவனோடதும் (அ)கிம்ச தான். ராத்திரி மெஸ்லதான் இவன் ஆள் புடிப்பான். பக்கத்துல உக்காந்து பாசமா ஆரம்பிச்சி, கொஞ்ச கொஞ்சமா மிரட்டுவான். எதுக்கா? தயிர் சாதம் திங்க சொல்லி. மெஸ்ல டெய்லி ராத்திரி தயிர்சாதம், அன்லிமிடெட். அதுக்காக, எவ்ளோ சாப்ட முடியும். கொஞ்ச நேரத்துல வயிறு கிழிஞ்சிருமோன்ற நெலம வந்தபொறகு தான், சாப்பாட்ட நிறுத்த விடுவான். அதுக்கப்புறம் தான் அவன் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் முடிக்கிறதுக்குள்ள, இங்க மேல்வயிறு, கீழ்வயிறு எல்லாம் நிரம்பி, அடி வயிறு நெருக்கும் பாருங்க, மரண அவஸ்தங்குறது அதான் (காமன் டாய்லட்டுக்கு க்யூல நிக்காதவங்களுக்கெல்லாம் இது சொன்னா புரியாது).
அவன் கைய கழுவுனதுலயிருந்து அஞ்சு நிமிசம் தான் டைம். “எல்லாத்தையும் முடிச்சிகிட்டு”, நம்ம புஸ்தகத்த தூக்கிகிட்டு அவன் ரூம்ல ஆஜர் ஆகணும்.
“படி தம்பி, படி”ன்னு அவனுக்கு தூக்கம் வர்றவரைக்கும் நம்மள படிக்க சொல்லி உசுரவாங்குவான். (பெத்தவங்க படின்னு சொன்னதையே கேக்காம உருப்படாம போனவங்க நாம. நம்மள பாத்து எப்படி சொல்லலாம் அவன், “படி”ங்கிற கெட்ட வார்த்தய).
படிச்சிட்டேன்னு சொன்னா, பதில் சொல்ல முடியாத கேள்வியாகேட்டு, மறுபடியும் படிக்க சொல்லுவான். “படிக்கதான தம்பி வந்த, படிப்பா தம்பி”ன்னு அரைமணிக்கு ஒரு அட்வைஸ் வேற. இதுல வயிறு நெறய இருக்குற தயிர்சாதத்தோட எபெக்ட், ஸ்ஸ்ஸ் அப்பா, நெனச்சாலே கண்ண கட்டுது.
எப்படியும் மூணு மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான். அதுக்கப்புறம், எங்க தூங்குறது. கொட்டாவி சத்தமும் கோழி கூவுற சத்தமும் ஒண்ணா இருக்கும்.
இது ஒரு நா கத இல்ல. ஒருத்தன புடிச்சான்னா, தொடர்ந்து ரெண்டு வாரத்துக்கு, அவன் விடமாட்டேன். இந்த பொழப்புக்கு, “செருப்பால கூட நாலு அடி அடிச்சிட்டு போடான்னு இருக்கும்”.
வீட்லயிருந்து ஃபோன் வந்தப்ப இவனுகள பத்தி கம்ளெயிண்ட் பண்ணா, எதிர் மொனையில தெருவே சிரிக்குது, speaker phone புண்ணியத்துல. எக்ஸ்ட்ராவா அட்வைஸ் வேற. “ஏண்டா, சும்மா நிக்க சொல்றதையும், நல்லா சாப்புடவோ இல்ல படிக்க சொல்றதையும் கம்ளெயிண்ட் பண்ற. நல்ல பசங்களா இருக்காங்க, அவனுக கூட சேந்து, அப்டியாவது படிச்சி உருப்படு.”
முணாவது ஆளூ:
இவன் மத்தவங்கள மாதிரி நாள் கணக்குல, வார கணக்குல படுத்த மாட்டான்.
ஒரு நாளைக்கு பத்து பசங்க தான், அதுவும் அவன் கண்ல சிக்குற முதல் பத்து பேருக்குத்தான் அந்த பாக்கியம். மாலை நேரங்களில் ஹாஸ்டல் வாசல்ல நிப்பான். (ஹாஸ்டல் யுனிவர்சிட்டியின் மெயின் கேட்டுக்கு செல்லும் பாதையில் இருந்தது. அதாவது, நம்மள தாண்டி தான் சாயங்காலம் யாரும் வெளிய போக முடியும்).
1. சட்டய கழட்டி inside outஆ மாட்டிக்கோ.
“எஸ் ஸார்”
2. பேன்ட்ட கழட்டி inside outஆ மாட்டிக்கோ.
“எஸ் ஸார்” (அறுனாகொடிக்கு நன்றி)
3. பனியன் எங்கடா? சட்டைக்கு மேல மாட்டு.
“எஸ் ஸார்”
4. இப்ப எல்லாரோட வாட்சையும் கழட்டி வரிசைல முதல்ல நிக்கிறவன் ரெண்டு கைலயும் மாட்டு
“எஸ் ஸார்”
5. இந்த டைம்பீஸ அவன் நெத்தியில மாட்டு
“எஸ் ஸார்”
6. நீ, இப்ப கார் ஓட்டு (சின்னபுள்ளைல வெளான்டிருப்பமே, பசங்க படத்துல வர்ற மாதிரி)
“எஸ் ஸார்”
7. அப்டியே போயி அவகிட்ட (அந்த நேரத்தில எந்த பொண்ணு வந்துகிட்டிருக்கோ) டைம் மேனஜ்மென்ட் பத்தி ஒரு நிமிஷம் லெக்சர் கொடுத்திட்டு, இந்த பேப்பர்ல “you are simply superb”ந்னு எழுதி அவ ஸைன் வாங்கிட்டு வா.
சாயங்காலம் வீட்டுக்கு போற மகராசி, எவ நின்னு டைம் மேனஜ்மென்ட் பத்தி லெக்சர் கேப்பா, அதுவும் சூப்பர்மேன்கிட்ட. “அக்கா, சீனியர், மேடம்”னு கெஞ்சிகிட்டே போகணும்.
சில புண்ணியவதிங்க வேணும்னே மெயின் கேட் வரைக்கும் இழுத்தடிப்பாங்க. (ஒருவேள நம்மள அந்த கெட்டப்புல இன்னும் நெறய நேரம் பாக்கணும்ங்ற ஆசையாக்கூட இருந்திருக்கலாம் :))).
எது எப்படியோ. நல்ல வேள, அப்பெல்லாம் கேமரா மொபைல் கெடயாது :)
ஆனா, அடுத்த வருசம் ஜூனியர்கள எல்லாம் வரிசையா
நிக்க வச்சி,
நிக்க வச்சி,
நிக்க வச்சி…..
(ஓண்ணும் செய்ய முடியலங்க. ஆன்டி ராகிங் ரூல்ஸ் ஸ்டிரிக்டா இம்பிளிம்ன்ட் பண்ட்டாங்க)
Picture courtesy: http://www.tribuneindia.com/2006/20060718/delhi.htm
Hey.. too good yaar and the way you nirated is simply amazing.. paaavam lam ungala solla matten.. naanga pavam.. we missed this things. ivlo thaana illa innum ethavatha marachuteengala ..avlo arvam katha kekurathulla… avlo than.. vera onnum illa
கத கேக்குறதுல எவ்வளவு ஆனந்தம்….
வணக்கம்..வார்த்தை.
வாங்க சார்.
கெடாவெட்டெல்லாம் நல்லபடியா நடந்ததுங்களா.
ஹா ஹா ஹா… நல்லாவே சொல்லி இருக்கீங்க
நன்றி அப்பாவி தங்கமணி .
Superb! அந்த 3 பெரும் உங்களை ரொம்ப நல்லவன்னு சொல்லிருப்பாங்களே!
அவ்..அவ்..அவ்வ்வ்வ்வ்
பரவாஇல்ல நண்பா..நல்ல பயிற்சி கொடுத்துருக்காங்க..ஒரு பதிவெழுத வாய்ப்பும் கொடுத்துருக்காங்க…!!
பதிவுலகத்துல இன்னைல இருந்து ராகிங் ஆரம்பிக்கிறோம்..ஈவ்னிங் களத்துக்கு வந்துடுங்க..ஹ..ஹா
மறுபடியும் மொதல்ல இருந்தா…????
அந்த நாள் நாபகம் வந்ததே நண்பனே நண்பனே
வாங்க உமாபதி. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
ha..ha… படிக்க சொல்லித்தந்திருக்காங்க… சாப்பிட வச்சிருக்காங்க…..இவ்வளவு நல்லவங்களா இருந்திருக்காங்க… இவங்களப்போய்…. இந்த பாவம் உங்களை சும்மா விடாது தம்பி.
மக்களே இவங்கள பாத்தீங்களா..? எவ்ளோ சந்தோஷம்னு, நம்ம நெலமய பாத்து…
சார்
தங்கள் எழுதியது சூப்பர்
நன்றி ராதிகா.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
Nalla ezhuthi irukeenga sound ! enga college nenappa varuthu !
– Ramya
நன்றி ramyamani.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
//ஓண்ணும் செய்ய முடியலங்க. ஆன்டி ராகிங் ரூல்ஸ் ஸ்டிரிக்டா இம்பிளிம்ன்ட் பண்ட்டாங்க//
சேம் ப்ளட்..
நம்ம எல்லாம் சீனியருக்கு எப்படி பயந்து பயந்து போனோம்.. இனிமேல் நமக்கு பயப்படவும் பசங்க வரப்போறாங்கன்னுப் பாத்தா, நம்மல அவங்களுக்கு பயப்பட வச்சிட்டாங்க..
நீங்க எல்லாம் எங்கத் தம்பி மாதிரிடான்னு பாசமாப் பேசிதான் ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டியிருந்தது..
அனுபவித்து எழுதியிருக்கீங்க.