Examined
- 14,630 times
அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண
நான் பாட்டுக்கும் சம்மா தாங்க இருந்தேன்.
(ஹலோ, உங்க மயிண்ட் வாய்ஸ்ஸ ஆஃப் பண்ணுங்க.
“நீ என்னைக்கிடா சும்மா இருந்த”,ன்னு நீங்க நெனைக்குறது, எனக்கு நல்லா கேக்குது).
வேல்தர்மாவோட (நெருப்பணை) firewall இல்லாமல் தாயானாள், பாத்தேன். நல்லா இருந்துச்சு. சரி அப்டியே நாமளும் ஒரு ட்ரை பண்ணி பாப்பமேன்னு எழுதுனது தான் இந்த வசனம்…ச்சி..ச்சி…கவித.
நெருப்பாய் அணைக்கையில்
மஞ்சத்தில்
நெருப்பணையை மறந்திட்ட
நெஞ்சத்தில்
தவிப்புகள் தளரும் வரை
தரச்சான்றும் தேடார்
தாய் யார், தந்தை யாரென
தகவலும் வேண்டார்
தரவிறக்கமே சொர்க்கம்
தரம் இறங்கியது செயல்படின்
தரித்திரமே நிதர்சம்
தர்க்கமே மிச்சம்
இந்த வரிங்கோ, firewall protection இல்லாத லேப்டாப்ல கண்ட சைட்டுக்குபோய் cracked software download பண்ணி, அது execute ஆகசோலோ laptop பணால் ஆயிடுமே, அத பத்தி எழுதுனதுப்பா.
இத்த நானு, கூடாபுணர்தல (கூடாபுணர்வ) மனசுல வச்சு எழுதலன்னு சொன்னா நீ என்ன நம்பவாபோற…
{கூடாபுணர்தல் (கூடாபுணர்வு) ஹைய்யா, தமிழ்ல புது வார்த்தைய கண்டுபுடிச்சிட்டேன். அதில்லயும், அந்த வார்த்த அமைப்ப பாருங்க. கூடாம புணரமுடியுமா? ஆனா “வேண்டா”ன்னு பொருள் வர்றதுக்கு “கூடா”தான நல்ல முன் ஒட்டு; கூடா நட்பு, கூடாவொழுக்கம் மாதிரி. இந்த மாதிரி வார்த்தைங்கள literature மக்கள் ஏதோ சொல்லி வகைப்படுத்துவாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க}.
(Picture courtesy: http://thetruthfulman.files.wordpress.com/2009/09/couple-laptop2-lg-new.jpg&imgrefurl=)
ரொம்ப அட்டகாசம் பண்றீரு…ஹ ஹா
நல்ல இருக்குப்பா..
அட்டகாசமா…?
நான் ஸ்மால் ஃபாய்ங்க…..
//நல்ல இருக்குப்பா//
இப்பிடி சொல்லிட்டீங்களே, நான் பாட்டுக்கும் இதே ரூட்டுல கிளம்பிட்டேன்னா, இந்த மக்களோட உசுருக்கு யாரு ஜவாப் சொல்றது
கல் நெஞ்சக்காரரய்யா நீர்….
ரொம்ப அட்டகாசம் பண்றீரு…ஹ ஹா
நல்லா இருக்குப்பா..
ரெண்டு வாட்டி அதே பின்னூட்டம் போட்டிருக்கீங்களே, இது எதுனா டபுள் மீனிங்கா!!??
கூடாபுணர்வு உண்மையில் இது நல்ல புதுக் கலைச்சொல் தான்…
thanx, adhithakarikalan
கண்ட கண்ட சைட்டுகெல்லாம் போகாதிங்க
நன்றி கதிர்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.