தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

32 நாள் தள்ளிருச்சு….

ஆமாங்க, period 32 நாள் ஆயிருச்சு…. சந்தோசமாதான் இருக்கு.
இவர் கெடைக்க நானும் கொடுத்துவச்சிருக்கணும் தான்.
ஒரு பொண்ணு ஒருத்தன கைபுடிச்சி வந்த பிறகு
காலண்டர பொரட்டுறப்ப
முத தடவையா 32 நாள் தள்ளிருச்சுன்னு
தெரியிறப்ப எவ்வளவு பரவசமா இருக்கும்.

கொஞ்ச நாளாவே, இவன் எங்க ஏரியாவுக்கு அடிக்கடி
வந்துட்டு போயிட்டு இருந்தான். ஒரு சிலர் வீட்டு வாசல்ல
உக்காந்து எதுவாவது பேசுவான்.
சில சமயம், sentimentடா பேசுவான்
சில சமயம், materialisticஆ பேசுவான்.
சில சமயம், philosophy
சில சமயம், science
சில சமயம், crisp
சில சமயம், வளவளான்னு….
ஆள் பாக்க என்னமோ “சொட்ட சுப்பு”
மாதிரி தான் இருப்பான், இருந்தாலும் இவன்ட்ட ஏதோ மேட்டர்
இருக்குன்னு எங்க காலனி ஆளுங்க கண்டுக்குனாங்க.

இவன் திண்ண பேச்சுக்கு தான் லாயக்கு, வேலைக்கு ஆகமாட்டான்னு
நெனச்ச ஒரு நாள் படாருன்னு வந்து என்ன கைபுடிச்சார்.
இவர் தான் எங்க வீட்ல பேசுனார். இவர் ஏற்கனவே preplanedஆ இருந்ததால
நாங்க registeration formalitiesமுடிஞ்சப்புறம் தான் எங்க மனவிழாவ
பத்தி எங்க காலனி ஆளுங்களுக்கே தெரிஞ்சது. விசயம் தெரிஞ்ச உடனே
வாழ்த்துறதுக்கு எங்க காலனி பெரியவங்க, பக்கத்து காலனி பெரியவங்க,
எங்க friendsந்னு பெரிய கூட்டமே வர ஆரம்பிச்சிட்டாங்க.
வந்தவங்கள கவனிக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருச்சு.
அதுனால‌ எங்க first nightல இவர்…………… வேண்டாம்,
நீங்க அப்புறம் கிண்டல் பண்ணுவீங்க.

ஆனா இவங்க வீட்ல இருந்து தான் இன்னைக்கி வரைக்கும்
யாரும் வரல. ஏன்னு கேட்டா இப்போதைக்கு அவங்களுக்கு
தெரியவேண்டாம்ன்னு மட்டும் சொல்றாங்க.
இவங்க வீட்டுகாரங்களும் நல்லவங்கதாங்க.
ஆனா, இவர் பண்ண காரியத்துக்கு யார் வூட்லதான்
எடுத்த உடனே சந்தோஷ படுவாங்க. அதுக்காக எத்தன நாள்
இப்படியே வாழமுடியும். இப்பவோ 32 நாள் தாண்டியாச்சு…..

அதாங்க எனக்கு கொஞ்சம் சங்கட்டமா இருக்கு. அதே மாதிரி
கொஞ்சம் சங்கட்டமான இன்னொரு விஷயம்……..
பசங்கள்ள இவர் கொஞ்சம் கூச்சப்பட்ற டைப்.
எத செய்யிறதுக்கும் ரொம்ப தயங்குறார்.
இதுவரைக்கும் 9 தடவ தான்…….

மத்தபடி என்ன நல்லா பாத்துக்குறார்.

எங்க வாழ்க்க இப்படியே போன கூட போதுங்க…..
ஆனா, கண்டிப்பா நாங்க இன்னும் நல்லா வாழ்வோம்ன்னு எனக்கு நம்பிக்க இருக்குங்க….

தினைக்கும் விருந்தாளிகளுக்கும் பஞ்சம் இல்ல.
கடல்தாண்டி போற தேசத்துல இருந்துகூட நிறையபேர் வருவாங்க.
இது வரைக்கும் வந்தவங்க ஒரு ரெண்டாயிரம் பேராவது இருக்கும்.
வந்திட்டு போனவங்க கடுதாசி போட்டு, இவர் பதில் போட்டுன்னு அது தாண்டும் நூற…..

இப்படியெல்லாம் உங்க கிட்ட
என் பதிவு பேசினா
நான் இன்னாபா பண்றது……

35 Responses to 32 நாள் தள்ளிருச்சு….

  1. shaan 19:52 இல் December 17, 2009

    ஹ ஹா ஹா ஹா! உண்மையை சொல்கிறேன் நண்பரே, இதுவரை இந்த மாதிரி கற்பனை வளம், எழுத்துத்திறன் மிகச்சிலரிடம் தான் பார்த்திருக்கிறேன்.

    • soundr 11:41 இல் December 18, 2009

      thanx, paa.
      ஆனா, கற்பனை வளம், எழுத்துத்திறனு
      என்னமோ சொல்றீங்க….
      அதுக்கெல்லாம் எனக்கு அர்த்தமே தெரியாதுபா…

  2. Bhuvanesh 20:48 இல் December 17, 2009

    பாஸ் இந்த ட்யூப் லைட் க்கு (நான் என்னை சொன்னேன்) புரியல.. யாராவது கமெண்ட்ஸ் போட்டா அதா படுச்சுட்டு ரீபிட் ஆகறேன்

  3. குந்தவை 08:36 இல் December 18, 2009

    ய்ப்பா….. ராசா….. முடியல.

    நானும் தலைப்ப பார்த்தவுடன் பயந்திட்டேன்.

    விவகாரம் புடிச்ச மனுசன்.

    • soundr 11:54 இல் December 18, 2009

      //ய்ப்பா….. ராசா….. முடியல.///
      ok..ok….relax பண்ணிட்டு
      பாராட்டுங்க, வெயிட் பண்றேன்.

      ஏன் மேடம், அந்த சமயத்துல நாள் தள்ளிப்போறது
      எவ்வளவு சந்தோசபட வேண்டிய விசயம்….
      //…பயந்திட்டேன்.
      விவகாரம் புடிச்ச மனுசன்.//னு
      ஒரு பச்ச மண்ண (என்ன சொன்னேன்) பாத்து
      என்ன வார்த்த சொல்லிட்டீங்க….

  4. --புவனேஷ்-- 09:08 இல் December 18, 2009

    அய்யோ.. இப்பதாம்னே புருஞ்சுது.. வெறி தனம்!! கலக்குங்க :)

    • soundr 12:00 இல் December 18, 2009

      ராத்திரி 9 மணிக்கு புரியாதது…
      நடுவுல ஒரு ராத்திரி
      கார்த்தால 9 மணிக்கு எப்படி புரிஞ்சது….?

      what is the reason?
      How was it possible..?
      Tell me, I want to know….

  5. ரோஸ்விக் 13:25 இல் December 18, 2009

    ஆத்தாடி 33-ம் நாள்ல யாருக்கும் தெரியாம கவர்ச்சியப் பார்த்து நானும் இங்க புகுந்துட்டனே… சரி விடுங்க. வந்ததுக்கு நானும் ஒரு தடவ …… ச்சீ போங்க.

  6. divyahari 13:38 இல் December 18, 2009

    nice one..

    ஏதோ ஏடாகூடம்ன்னு நெனச்சி, எல்லாருமே ஷாக் ஆகிட்டாங்க..
    என்னையும் சேர்த்து..

    • soundr 14:28 இல் December 18, 2009

      இதுல ஷாக்காக என்ன madam
      இருக்கு…..
      ஒருத்தர கைபுடிச்ச பொறகு
      நாள் தள்ளிப்போறது
      எவ்வளவு சந்தோசமான விஷயம்,
      அந்த பொண்ணுக்கு,
      அவ கணவனுக்கு,
      family, etc…

      உங்க வருகைக்கும், கருத்துக்கும்
      நன்றி.

  7. divyahari 16:28 இல் December 18, 2009

    சந்தோசம் தான். ஆனா இவ்ளோ பகிரங்கமா எழுதிருக்காங்கலேன்னு தான் ஷாக் ஆகிட்டேன்.. வேற ஒன்னும் இல்லை நண்பா.. நான் புதுசா எழுத வந்திருக்கேன்.. என் பதிவ பார்த்துட்டு எனக்கு பின்னூட்டமிட்டால் மகிழ்வேன்.. http://everythingforhari.blogspot.com/2009/12/blog-post.html

  8. சிவப்ரியன் 21:37 இல் December 18, 2009

    நல்ல நடை (அட எழுத்துலதாம்பா!),
    வாழ்த்துக்கள்.

  9. soundr 22:39 இல் December 18, 2009

    நன்றி சிவப்ரியன்.
    வருகைக்கும், வாழ்த்துக்கும்.

  10. padmahari 14:07 இல் December 19, 2009

    ம்ம்ம்…..பரவாயில்லையே!

  11. karishna 14:03 இல் December 23, 2009

    hey cool!! நல்லா இருக்கு பா……

  12. divyahari 18:56 இல் December 27, 2009

    enna achinga ungala kanum? ean ethum ezhuthala?

  13. jaggybala 13:02 இல் ஜனவரி 5, 2010

    வித்தியாசமான சிந்தனை. நல்ல ரசனை. வாழ்த்துக்கள் நண்பரே, நிறைய எழுதுங்கள்.

  14. divyahari 08:20 இல் ஜனவரி 18, 2010

    enna achinga? ean ethum ezhuthala innum? eppo varuvinga?

  15. --புவனேஷ்-- 09:34 இல் ஜனவரி 19, 2010

    இப்ப உங்க ப்ளாக் பேசுனா.. “கல்யாணம் பண்ணி நல்லா அனுபவுச்சுட்டு 32 நாள் தள்ளின வுடனே ஒடுனவரு ஒடுனவரு தான்” னு சொல்லும்..

    சீக்கிரம் வந்து அத கண்டுக்கோ அண்ணே !

    • soundr 10:54 இல் ஜனவரி 27, 2010

      //….நல்லா அனுபவுச்சுட்டு 32 நாள் தள்ளின வுடனே ஒடுனவரு….//

      3 மாசம் வரைக்கும் தள்ளிபடுன்னு டாக்டர் சொன்னாங்க, அதேன்…
      ஹி..ஹி…

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.